அதிகாலையில் கோவிலுக்கு போன அஜித்... கண்களை மூடி மனமுருகி பிரார்த்தனை!

சென்னை : நடிகர் அஜித்குமார் கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

எச்.வினோத் அஜித் கூட்டணியில் தயாரான வலிமை படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. அதிரடி ஆக்‌ஷன் கதையம்சத்துடன் வெளியான இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் பெற்றது.

வலிமைத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி ரூ,200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

ஏ.கே.61

ஏ.கே.61

அஜித் நடிக்கும் ஏ.கே.61 படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித், ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படம் மணி ஹெய்ஸ்ட் வெப் தொடர் பாணியில் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை

ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை

இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஆக்‌ஷன் காட்சிகளே இருக்காது என கூறப்படுகிறது. ஆக்‌ஷனுக்கு பெயர்போன அஜித்துக்கு ஆக்‌ஷன் காட்சிகளே இல்லை என்றால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் வலிமை திரைப்படத்தில் அதிகம் அக்ஷன் காட்சிகள்தான் இருந்தன. பைக் ரேஸில் டூப்பே இல்லாமல் பட்டையை கிளப்பி இருந்தார் அஜித். அதை ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்த்த நிலையில் இந்த படத்தில் அக்ஷன் இல்லை என்பதை ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெரியவில்லை.

மாஸ் லுக்கில்

மாஸ் லுக்கில்

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தை எப்போதுமே சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் பார்த்த ரசித்து இருப்போம். தற்போது வெளியாகி உள்ள புகைப்படத்தில் வெள்ளை முடியுடன் பார்க்கவே மாஸா இருக்கிறார். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கல்பாதி விஸ்வநாதர் கோவிலுக்கு அதிகாலை 5மணி அளவில் வெள்ளை வேட்டி, வெள்ளை துண்டுடன் மனம் உருகிபிரார்த்தனை செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.

அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

மேலும், அஜித்குமார் குருகிருபா ஆயுர்வேத பாரம்பரிய சிகிச்சை மையத்திற்கு சிகிச்சைக்காக சென்று இருப்பதாவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றனர். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இணையத்தில் வெளியாகததால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரிவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X