ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு த்ரிஷா பக்கத்தில் ஜம்முன்னு உட்கார்ந்திருக்கும் அஜித்.. செமயா டிரெண்டாகுது!

சென்னை: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த நிலையில், எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ள நிலையில், தொடர்ந்து அஜித் குறித்த அப்டேட்களும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக மாறி வருகிறது.

விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகி ரசிகர்களை ரீல்ஸ் போட வைத்து வருகிறது. லிரிக் வீடியோ மாலையில் தான் வரும் என அறிவித்து விட்டனர். கண்டிப்பாக இந்த பாடலுக்கு அஜித் ஆட்டம் போட்டிருக்க மாட்டார் என்றும் அவரது திருமணத்தில் மற்றவர்கள் பாட்டுப் பாடி ஆட்டம் போடும் விதமாக பாடல் அமைந்திருக்கும் என்கின்றனர்.

ajith kumar vidamuyarchi trisha


எப்படியும் த்ரிஷாவுடன் இணைந்து அஜித் குமார் ஆடியிருப்பார் என்றும் லிரிக் வீடியோவில் அந்த காட்சிகள் வெளியானாலே போதும் என ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

ஹனிமூன் ட்ரிப்பா?: விடாமுயற்சி படத்தில் த்ரிஷாவை திருமணம் செய்துக் கொண்டு ஹனிமூன் ட்ரிப்புக்காக வேர்ல்ட் டூர் செல்கிறாரா அஜித் குமார். அப்போது தான் த்ரிஷா கடத்தப்பட அவரை காப்பாற்ற போராடுவதுதான் படத்தின் கதையாக இருக்குமா என்றெல்லாம் விடாமுயற்சி கதை குறித்து விவாதங்கள் கிளம்பி உள்ளன. ஏற்கனவே ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், நிச்சயம் ரசிகர்களை கவர கூடுதல் சுவாரஸ்யங்களை மகிழ் திருமேனி சேர்த்திருப்பார் என்கின்றனர்.

ஷார்ட் அணிந்து அஜித்: விடாமுயற்சி படத்தின் இறுதிநாள் ஷூட்டிங் முடிந்து விட்டு படக்குழுவுடன் சில் செய்யும் போது எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போட்டோவை ஷேர் செய்து அஜித் குமாருக்கும் படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷா அருகே அழகாக ஷார்ட்ஸ் அணிந்துக் கொண்டு அஜித் இந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

ஷங்கர் படம் ஓடுமா?: ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி நடிப்பில் உருவாகி வரும் ஷங்கரின் கேம் சேஞ்சர் மற்றும் பாலாவின் வணங்கான் படங்கள் அஜித்தின் விடாமுயற்சி படத்துடன் பொங்கலுக்கு மோதவுள்ள நிலையில், அந்த படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு தமிழ்நாட்டில் ஓடுமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X