Ajith Kumar Salary: அடேங்கப்பா அஜித் சம்பளம் 187 கோடியா?.. அதுவும் இப்படித்தான் வாங்கப் போறாரா?

சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முதல் நபராக 200 கோடி சம்பளம் வாங்கிய நிலையில், ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் சுமார் 180 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகின்றனர். குட் பேட் அக்லி படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ல ஏகே 64 படத்திற்கு பெரிய சம்பளத்தை அஜித் குமார் லாக் செய்துள்ளார் என்கின்றனர்.

நடிகர்கள் ஷேர் முறையில் தான் இனிமேல் சம்பளம் வாங்க வேண்டும் என தொடர்ந்து தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தாலும் சில முன்னணி நடிகர்கள் முதல் பிரபல நடிகர்கள் வரை அதற்கு சம்மதம் தெரிவிக்கும் மன நிலையில் இல்லை என்றே தெரிகிறது.

Ajith Kumar will receive 187 Crores for AK64 movie with one strict condition

இயக்குநர் சொதப்பி விட்டு படம் ஓடவில்லை என்றால் தங்களுக்கு வரவேண்டிய சம்பளம் பாதிக்குமே என்பதால் பல நடிகர்கள் படங்களை கமிட் செய்யாமல் சும்மா இருந்தாலும் இருப்போம் என்கிற முடிவுக்கே வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் கிடைத்துவிட்டாராம்: அஜித் குமார் கேட்கும் அதிக சம்பளத்தை கொடுத்து அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை என சில ரூமர்கள் சினிமா வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருந்த நிலையில், தற்போது அஜித் குமாரை வைத்து படமெடுக்க பெரிய நிறுவனம் ஒன்று முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

187 கோடி சம்பளம்: அஜித் குமார் கடைசியாக நடித்து வெளியான குட் பேட் அக்லி திரைப்படமே அதிகபட்சம் 200 கோடி ரூபாய் தான் பாக்ஸ் ஆபீஸில் ஈட்டியது. இருந்தாலும், அஜித் குமார் தொடர்ந்து தனது சம்பள விஷயத்தில் கறாராக இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. தந்தி டிவி வெளியிட்ட அறிவிப்பின் படி அஜித் குமாரின் சம்பளம் 187 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

வங்கி கணக்கில் மட்டுமே: இந்த 187 கோடி ரூபாய் சம்பளத்தையும் அஜித் குமார் தனது வங்கி கணக்கில் மட்டுமே தவணை முறையில் செலுத்த வேண்டும் என தயாரிப்பாளர்களுக்கு ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார் என பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. அஜித் குமாரின் சம்பள விவரங்கள் தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X