தல தல தான்…. மெர்சலான வில்லன் கபீர் துஹான் சிங்

Recommended Video

தல கூட நடிச்சாச்சு அடுத்து தளபதி | ACTOR KABIR | V-CONNECT | FILMIBEAT TAMIL

சென்னை: வேதாளம் திரைப்படத்தில் நடித்த வில்லன் நடிகர் கபீர் துஹான் சிங் தல அஜித் குமார் பற்றியும், அவர் வேதாளம் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பேசுகையில், அஜித் சார் மிகவும் நல்ல மனிதர். அவர் அனைவருடனும் பாகுபாடு இன்றி ஒரே மாதிரி தான் பழகுவார். அவருடன் பணிபுரியும் அனைவர் மீதும் மிகுந்த அக்கறை எடுத்து கொள்வார். தமிழ் சினிமாவில் அவர் நிச்சயம் ஒரு ஸ்டார் நடிகர் என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

சிவா இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு அஜித் குமார், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான திரைப்படம் வேதாளம். இப்படத்தில் வில்லனாக வரும் ராகுலின் இளைய சகோதரனாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் கபீர் துஹான் சிங். இவர் ஜில் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.

Ajith Kumar will take great care of all those who work with him-Kabir Duhan Singh

கபீர் தற்போது பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு சென்னை மிகவும் பிடித்திருப்பதாகவும், பிடித்த உணவு என்று வரும் போது தனக்கு பிரியாணி மிகவும் பிடித்திருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ் சினிமாவில் தனது முதல் திரைப்படம் வேதாளம்.

தல அஜித் குமார் பற்றியும், அவர் வேதாளம் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பேசுகையில், அஜித் சார் மிகவும் நல்ல மனிதர். அவர் அனைவருடனும் பாகுபாடு இன்றி ஒரே மாதிரி தான் பழகுவார். அவருடன் பணிபுரியும் அனைவர் மீதும் மிகுந்த அக்கறை எடுத்து கொள்வார். தமிழ் சினிமாவில் அவர் நிச்சயம் ஒரு ஸ்டார் நடிகர். அந்த பந்தாவோ இமேஜோ அவரிடம் சிறிதும் வெளிப்படாது. அவருடன் சுமார் 25 நாட்கள் இணைந்து பணிபுரிந்துள்ளேன்.

ஒரு நாள் கூட அவரை நான் சூப்பர் ஸ்டார் என்ற இமேஜோடு பார்த்ததே இல்லை. அவர் அவரது இனோவா காரில் வருவார். எங்களோடு இணைந்து உணவு உண்பார், ஷூட்டிங் கடைசி நாளன்று அவரே படக்குழுவினருக்கு உணவு சமைப்பார். அவருக்கு சமையல் செய்வது மிகவும் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மிகவும் சிம்பிள் மற்றும் தாழ்மையானவர் என்றார் கபீர்.

கபீர் அஜித் பற்றி மேலும் கூறுகையில், 7ஆம் நாள் படப்பிடிப்பில் அஜித் சார் படக்குழுவினருக்காக மட்டன் பிரியாணி சமைத்தார். என்னையும் சாப்பிட அழைத்தார். நான் சிக்கன், மீன் சாப்பிடுவேன் ஆனால் மட்டன் சாப்பிடமாட்டேன் என்று கூறியதை மனதில் வைத்து கொண்டு அடுத்த முறை அவர் எனக்காக சிக்கன் பிரியாணி சமைத்தார். எனக்காக சிக்கன் சமைத்தது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. எனக்கு அவர் ஒரு அப்பா ஸ்தானத்தில் தெரிந்தார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் கபீர்.

ஒரு மனிதன் வெற்றி பெறுவது சாத்தியம். யார் மனது வைத்தாலும் வெற்றியடைந்து விடலாம் ஆனால் வெற்றி பெற்ற பிறகு ஒரு மனிதன் அன்பாகவும்
பண்பாகவும், பிறரிடம் மரியாதையாகவும் இருப்பது மிகவும் கடினம். அந்த வெற்றியை தலைக்கு ஏற்றி கொள்ளாமல் இருப்பது கடினம். அந்த வகையில் அஜித் குமார் ஒரு மாமனிதர். அவரிடம் இருந்த நான் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

எத்தனை வெற்றி படங்களில் நடித்தாலும் தாழ்மையுடனும், பண்போடும், அனைவரிடத்திலும் அன்பாகவும் இருக்க வேண்டும் என்பதை நான் அவரிடமிருந்து தான் கற்று கொண்டேன். அஜித் சார் குடும்ப பற்று மிக்கவர். ஒவ்வொரு முறை என்னை பார்க்கும் போது எல்லாம் ஏன் குடும்பத்தின் நலன் குறித்து விசாரிப்பார். அவருடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறேன். நான் சாப்பிடும் டயட் குறித்து கேட்டு கொண்டார். வேதாளம் படத்திற்காக கடுமையாக உழைத்தார் என்று கூறினார் கபீர்.

ஒரு வட நாட்டுக்காரர் நமது தமிழ் சினிமாவில் உள்ள ஒருவரை பற்றி புகழ்ந்து பேசுவது நமக்கு பெருமை சேர்க்கிறது. அஜித் பற்றி பேசும் போது மனம் நெகிழ்ந்து கண் கலங்குகிறார் கபீர். தமிழ் மக்கள் அனைவருக்கும், அஜித் எவ்வளவு பண்பானவர், அன்பானவர் என்பது அறிந்த விஷயம் ஆனால் அதையே வட மாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் அவரை பற்றி உருக்கத்துடன் பேசுவது தமிழ் சினிமாவிற்கே ஒரு கர்வமான விஷயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X