Good Bad Ugly Box Office Prediction: குட் பேட் அக்லி முதல் நாள் வசூல் இத்தனை கோடி வருமா?.. சம்பவம் மாமே!

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்துக்கான எந்தவொரு புரமோஷனல் நிகழ்ச்சிகளும் பிரம்மாண்டமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரா என எங்கேயும் நடத்தவில்லை. ஆனால், அஜித் படத்துக்கு அதெல்லாம் இல்லையென்றாலும் படம் ரசிகர்களை கவர்ந்துவிட்டால் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் என்பது எழுதப்படாத விதி.

இந்த ஆண்டு அஜித் குமார் நடித்து வெளியான விடாமுயற்சி திரைப்படம் ஹாலிவுட் படமான பிரேக்டவுன் படத்தின் தழுவலாக உருவாகியிருந்தது. மாஸ் மசாலா படமாக இல்லாமல் தரமான படைப்பை மகிழ் திருமேனி இயக்கத்தில் கொடுக்க வேண்டும் என அஜித் நினைத்த நிலையில், ரசிகர்களுக்கு அந்த படம் பெரிதாக தியேட்டரில் கனெக்ட் ஆகவில்லை.

Ajith Kumar s Good Bad Ugly Box Office Prediction in Tamil is here

ஆனால், மார்க் ஆண்டனி படத்துக்குப் பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள நிலையில், பக்கா கமர்ஷியல் படமாக இந்த படம் தியேட்டர்களை தெறிக்கவிடும் என தெரிகிறது. முதல் நாள் வசூல் எந்தளவுக்கு இருக்கும் என்கிற கணிப்பை இங்கே பார்க்கலாம் வாங்க..

குட் பேட் அக்லி வசூல் கணிப்பு: ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன் இயக்கிய படங்களில் அதிக வசூலை பெற்ற படமாக மார்க் ஆண்டனி மாறியது. அவருடைய லைஃப் டைம் செட்டில்மெண்ட் படமாக குட் பேட் அக்லி நிச்சயம் மாறப்போகிறது. அஜித் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூல் என்றால் அது விஸ்வாசம் தான் என்கின்றனர். இந்நிலையில், குட் பேட் அக்லி முதல் வாரத்திலேயே விஸ்வாசம் வசூலை முறியடித்துவிடும் என ரமேஷ் பாலா கருத்து தெரிவித்துள்ளார்.

முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்?: தமிழ்நாட்டில் டிக்கெட் புக்கிங் முதல் நாளில் செம சூடி பிடித்திருக்கிறது. திரையிட்ட பல இடங்களில் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டன. காலை முதல் இரவு நேர காட்சிகள் வரை அனைத்து இடங்களிலும் நிரம்பி வழிகின்றன. முதல் நாள் படம் பார்க்க டிக்கெட் கிடைக்காமல் பலர் தவித்து வருகின்றனர். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் முதல் வாரமே வசூல் வேட்டை நடத்தும் என்பது உறுதியாகிவிட்டது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக 35 கோடி ரூபாய் வரை ஓபனிங் வரும் என ரமேஷ் பாலா கணித்துள்ளார்.

உலகளவில் எத்தனை கோடி?: முதல் நாளில் குட் பேட் அக்லி திரைப்படம் அதிகபட்சமாக 60 முதல் 70 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர், படத்துக்கு கிடைக்கும் விமர்சனத்தை பொறுத்து வசூல் அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார். இதுவரை வெளியான அஜித் படங்களிலேயே அதிக வசூல் செய்யப் போகும் படமாக குட் பேட் அக்லி மாறும் என சினிமா வட்டாரமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

கடந்த 5 படங்களின் வசூல் நிலவரம்: அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் 135.65 கோடி வசூல் செய்துள்ளதாக Sacnilk இணையதளம் தெரிவித்துள்ளது. துணிவு திரைப்படம் 200 கோடி என்றும் வலிமை 164.5 கோடி என்றும் நேர்கொண்ட பார்வை 126.7 கோடி என்றும் விஸ்வாசம் திரைப்படம் 204.26 கோடி என்றூம் Sacknilk இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X