AAA பார்ட் 2வா குட் பேட் அக்லி?.. ஆதிக் ரவிச்சந்திரன் யாருக்கு சம்பவம் பண்ணப் போறாரோ தெரியலையே?

சென்னை: விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள அடுத்த படம் குட் பேட் அக்லி. அந்த படத்திற்கு பிறகு அஜித் குமார் அடுத்து யார் இயக்கத்தில் இணையப் போகிறார் என்பது குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. கார் பந்தய போட்டிகளை முழுவதுமாக முடித்துவிட்டு அடுத்த ஆண்டு தான் அவர் மீண்டும் சினிமா பக்கம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் குமார் நடிப்பில் வெளியான படங்களிலேயே கடைசியாக விஸ்வாசம் படம் தான் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு துணிவு படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய தோல்விப் படமாக மாறியதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Ajith Kumar s Good Bad Ugly is a part 2 of AAA buzz trending in Kollywood

படத்தின் வசூல் குறித்து கடைசி வரை கெத்தாக லைகா நிறுவனம் அறிவிக்காத போதே அந்த படம் ஃபிளாப் தான் என்கின்றனர். இந்நிலையில், குட் பேட் அக்லி படம் AAA பார்ட் 2வா என்கிற பேச்சுகள் தற்போது சினிமா வட்டாரத்தில் கிளம்பியுள்ளன. அதனால், அந்த படத்துக்கு பாதகமா? அல்லது சாதகமா? என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

சிம்பு படம்: த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுமகமானவர் தான் ஆதிக் ரவிச்சந்திரன். ஆரம்பத்தில் அடல்ட் பட இயக்குநராக அறியப்பட்டாலும் அவரை நம்பி சிம்பு படம் கொடுத்தார். அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என AAA படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் சொதப்பியது. அதன் பின்னர், பிரபுதேவாவை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய பஹீரா எனும் காவியத்தை கழுவி ஊற்றாத ஆளே இல்லை. கடைசியாக அனைத்துக்கும் பிராயச்சித்தமாக மார்க் ஆண்டனி படத்தைக் கொடுத்து குட் பேட் அக்லி படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுவிட்டார் ஆதிக் ரவிச்சந்திரன்.

AAA பார்ட் 2வா?: சிம்பு 3 விதமான தோற்றங்களில் நடித்து வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் எப்படி அவரை 3 கெட்டப்புகளில் ஆதிக் ரவிச்சந்திரன் காட்டினாரோ அதே போலத்தான் அஜித் குமாரை குட் பேட் அக்லி படத்தில் காட்டப்போகிறார் என்கின்றனர். அதிலும், மதுரை மைக்கேல் கதாபாத்திரத்திற்காக வைத்து இருந்த காட்சிகளை எடுக்க முடியாத நிலையில், அதன் கலவையாகவே அஜித் குமாரின் அக்லி கேரக்டரை டெவலப் செய்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன் என்று பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.

சம்பவம் யாருக்கு?: ஆனால், கண்டிப்பாக இந்த முறை ஆதிக் தவறு செய்யவில்லை என்றும் அந்த கதாபாத்திரம் அட்டகாசமாக வந்திருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மா டாங் சியோக் நடிப்பில் வெளியான தி கேங்ஸ்டர் தி காப் தி டெவில் படத்தின் ரீமேக் என்றும் சில பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. விடாமுயற்சி படம் பிரேக்டவுன் ரீமேக் என்கிற தகவல்கள் வெளியாகி பாராமவுண்ட் பஞ்சாயத்து பண்ணது போல இந்த படத்துக்கு ஏதாவது கடைசி நேர சிக்கல் வருமா? அல்லது ஆதிக் அனைத்தையும் சரியாக செய்திருப்பாரா என்பது எல்லாம் விரைவில் தெரிந்துவிடும். வரும் மார்ச் 14ம் தேதி குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகப் போகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X