விடாமுயற்சியை ஓவர்டேக் செய்த குட் பேட் அக்லி.. அஜித்தின் தரமான சம்பவத்துக்கு ரெடியா?.. எப்போ ரிலீஸ்?
சென்னை: மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதி புஷ்பா 2 படத்தை வெளியிட்டு இந்தியளவில் வசூல் வேட்டை நடத்த காத்திருக்கிறது. அத்துடன் கொண்டாட்டத்தை நிறுத்தாமல் ஜனவரி மாதமே அஜித் ரசிகர்களுக்கான திருவிழாவையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித், த்ரிஷா நடித்து சுமார் 2 ஆண்டுகளாக உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் தான் முதலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தின் பேட்ச் வொர்க் இன்னமும் முடியவில்லை என்கின்றனர்.

அஜித்தை வைத்து மேலும், 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டுமாம். ஆனால், அதற்கு ஏகப்பட்ட காரணங்களுக்காக நேரம் ஒதுக்கமுடியாமல் அஜித் உள்ள நிலையில், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என்கின்றனர்.
பொங்கலுக்கு குட் பேட் அக்லி: ஆதிக் ரவிச்சந்திரன் சும்மா ஜெட் வேகத்தில் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பையே முடித்து விட்டார் என்கின்றனர். வரும் பொங்கலுக்கு குட் பேட் அக்லி திரைப்படம் தான் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் சுரேஷ் சந்திரா மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்துக்கு ஜோடியாக இந்த படத்திலும் த்ரிஷா நடித்துள்ளார். பிரசன்னா வில்லனாக நடித்துள்ளார்.
விடாமுயற்சி மீண்டும் லேட்: இந்த ஆண்டு இறுதிக்குள் விடாமுயற்சி வெளியாகும் என்றும் இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டும் படமாக மாறி கோட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டை முறியடிக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு கூட வராது என்றும் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதிக்குத்தான் இந்த படம் தள்ளிப் போகும் என்றெல்லாம் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
உடல் எடை குறைத்த அஜித்: குட் பேட் அக்லி படத்திற்காக நடிகர் அஜித் 20 கிலோ வரை எடை குறைத்து நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் ஜனவரி மாதம் அஜித் குமார் துபாயில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவுள்ளார். இந்நிலையில், குட் பேட் அக்லி திரைப்படமும் பொங்கலுக்கு வெளியானால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications