மீண்டும் பைக்கை எடுத்த அஜித்.. அப்போ விடாமுயற்சி அவ்ளோதானா?.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட செம பிக்!

சென்னை: நடிகர் அஜித் மீண்டும் பைக் டூர் கிளம்பிய புகைப்படத்தை சுரேஷ் சந்திரா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் அஜித்துக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், அப்பல்லோ மருத்துவமனைக்காக சிகிச்சைக்காக சென்றார். அஜித்துக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் பதறிப் போனார்கள்.

நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் தனது மகன் ஆத்விக்குடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அஜித் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார், அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை தெளிவுப்படுத்தியிருந்தார்.

Ajith Kumar s latest bike tour photo shared by Suresh Chandra

இந்நிலையில், மீண்டும் பைக் எடுத்துக் கொண்டு அஜித் கிளம்பி விட்டார் என சுரேஷ் சந்திரா போட்டோ ஒன்றை வெளியிட்டு அஜித் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்.

பைக் டூர் கிளம்பிய அஜித்: உடல்நிலை பிரச்சனை எல்லாம் ஒன்றுமே இல்லை என்றும் அஜித் எப்போதும் போல ஃபிட்டாக இருக்கிறார் என அவர் பைக் டூர் கிளப்பிய புகைப்படம் ஒன்றை தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சுரேஷ் சந்திரா. நடிகர் அஜித் பைக்கை ஒரு இடத்தில் பார்க் செய்து விட்டு கொட்டாய் போன்ற ஒரு இடத்தில் தனது ஹெல்மெட்டை கழட்டி விட்டு காலை நீட்டி பெஞ்சில் வைத்து பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித்தை சிரித்த முகத்துடன் பார்த்த ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பியாகி உள்ளனர்.

குட் பேட் அக்லி அறிவிப்பு: நடிகர் அஜித் ஒரு பக்கம் பைக் டூர் கிளம்பிய நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள ஏகே 63 படத்திற்கு குட் பேட் அக்லி என டைட்டில் வைத்து டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டனர். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடாமுயற்சி என்னாச்சு?: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ் நடிப்பில் அஜர்பைஜானில் உருவாகி வந்த விடாமுயற்சி படம் என்ன ஆச்சு என்றும் அதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்குமா? அல்லது கிடப்பில் போடப்பட்டு குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்க ஆரம்பித்து விடுவாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஓய்வெடுக்கலாமே?: உடல் நலக்குறைவு காரணமாக அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மைனர் ஆப்பரேஷன் நடைபெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், மீண்டும் அஜித் பைக் டூர் ஏன் கிளம்பினார். அவர் நல்லா ஓய்வெடுத்து உடம்பை கவனித்துக் கொள்ளலாமே என்றும் அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X