அஜித் இப்படி ஆகிட்டாரே.. படத்துக்கான கெட்டப்பா?.. ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
சென்னை: அஜித்குமார் நடிப்பில் இந்த வருடம் வெளியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களுமே பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் குட் பேட் அக்லி படத்தை மெகா ஹிட் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடத்தான் செய்கிறார்கள். ஆனால் பொதுவான ரசிகர்களுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லை. இதற்கிடையே சமீபத்தில்தான் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் அஜித் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன.
அஜித்குமார் கடைசியாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களின் இயக்குநர்களோடும் ஏகே முதன்முறையாக சேர்ந்ததால்; இரண்டு படங்களின் மீதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் விடாமுயற்சி படுதோல்வியையும், குட் பேட் அக்லி சுமாரான வரவேற்பையுமே பெற்றது அதேசமயம் அஜித் ரசிகர்களுக்கு குட் பேட் அக்லி அவ்வளவு பிடித்திருந்ததாகவும்; படம் முழுக்க மாஸ் சீன்களை அள்ளி வைத்திருக்கிறாரே இயக்குநர் என்றும் அவர்கள் கொண்டாடிவருகிறார்கள். படமும் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறதாம்.
கார் ரேஸில் ஆர்வம்: ஏகே இப்போது சினிமாவைவிடவும் கார் ரேஸ் மீது உச்சக்கட்ட ஆர்வத்தையும், முழு கவனத்தையும் திருப்பியிருக்கிறார். துபாய், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடந்த பந்தயத்தில் தனது ரேஸிங் டீமோடு கலந்துகொண்ட அவர் வெற்றி பெறவும் செய்தார். இதன் காரணமாக அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான். அதேசமயம் ரேஸ் நடக்கும் சமயங்களில் கண்டிப்பாக திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார். எனவே இன்னும் சில வருடங்கள் மட்டும்தான் அவர் சினிமாவில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

பத்ம பூஷன் அஜித்: இதற்கிடையே அஜித்குமாருக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அந்த விருதினை சில நாட்களுக்கு முன்புதான் டெல்லியில் ராஷ்டிரபதி பவனுக்கு சென்று பெற்றுக்கொண்டார் அவர். அவருக்கு அதனையொட்டி பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். விருதினை வாங்கிய பிறகு இத்தனை வருடங்கள் மீடியாவை சந்திக்காத அவர் தனியார் ஆங்கில ஊடகத்துக்கும் பேட்டியை கொடுத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்தியது. விரைவில் தமிழ்நாட்டிலும் ஊடகத்திடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த படமும் ஆதிக்: இதற்கிடையே குட் பேட் அக்லி திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக ஹிட்டாகத்தான் அமைந்தது. சூழல் இப்படி இருக்க அவரது அடுத்த படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. விஷ்ணுவர்தன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் எல்லாம் அடிபட்டன. ஆனால் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க அதிக வாய்ப்புகள் இருப்ப்தக சொல்லப்படுகிறது.
ட்ரெண்டாகும் புகைப்படங்கள்: இந்நிலையில் அஜித்தின்லேட்டஸ்ட் புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன. அந்தப் புகைப்படங்களில் அஜித் மொட்டை அடித்திருக்கிறார். அதாவது பெல்ஜியம் நாட்டில் நடக்கவிருக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார். எனவே அதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். பயிற்சிக்காக அவர் வந்தபோது எடுத்த வீடியோவில்தான் அஜித் மொட்டை அடித்திருப்பது தெரியவந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஏகே சும்மா மொட்டை அடித்திருக்கிறாரா இல்லை ஏகே 64 படத்தின் கெட்டப்புக்காக அடித்திருக்கிறாரா என்று தலையை பிய்த்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











