உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய அஜித்.. ஷாக் ஆன ரசிகர்கள்

சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் பிற நடிகர்களை போன்று இல்லாமல் வித்தியாசமான அணுகுமுறை கொண்டவர் என்ற பெயரை எடுத்துள்ளார். அவரது படத்தில் இடம்பெறும் வசனத்தை போன்று ஆசைக்கும், பேராசைக்கும் நடுவில் பிடித்ததை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராகவும் அவரது செயல்கள் மதிக்கத்தக்க வகையில் உள்ளன. நடிப்பை தாண்டி பன்முகத் திறமையுடன் திறம்பட செயல்படும் நடிகராகவும் திகழ்கிறார். இதற்காகவே ரசிகர்கள் அவரது வெற்றி தோல்வியை தாண்டி கொண்டாடி மகிழ்கின்றனர்.

அஜித்தை கொண்டாடும் ரசிகர்கள்: நடிகர் அஜித்திற்கு மிகவும் பிடித்த விளையாட்டு கார் ரேஸ் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அண்மையில் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்தின் அணி 992 பிரிவில் 3வது இடத்தை பிடித்தது. உலகளவில் அஜித்தின் புகழ் தென்பட தொடங்கியது. மேலும், அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்திய நாடே அவரது திறமையை போற்றி மகிழ்ந்தது.

ajith Lost weight Ajith photo Viral Portugal Race

குட்பேட் அக்லி ரிலீஸ் எப்போது: இந்நிலையில், இயக்குநர் மகிழ் திருமேணி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் கடந்த 6ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

2 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தை திரையில் காணும் ரசிகர்கள் அவரது படத்தினை பண்டிகை போல் கொண்டாடி வருகின்றனர். அஜித் கூறும் வசனத்தை போன்று பண்டிகைக்கு படம் வரவில்லை என்றால் என்ன, நம்ம படம் வரும் நாள் பண்டிகை தான் என கூறியுள்ளார். அதே போன்று அடுத்த பண்டிகையை கொண்டாட அவரது ரசிகர்கள் இப்பொழுதே ஆரவாரத்துடன் காத்திருக்கின்றனர்.

உடல் எடையை குறைத்த அஜித்: போர்ச்சுகலில் நடைபெறவுள்ள கார் ரேசில் அஜித் கலந்துகொள்ளவுள்ளார். தற்போது இந்த ரேஸில் பங்கேற்பதற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் உடல்நிலையை நல்லா பாத்துக்கோங்க சார் என பாசமழையை பொழிந்து வருகின்றனர். அவர் உடல் எடையை குறைத்தது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

முன்னதாக துபாயில் நடக்கவிருக்கும் கார் பந்தயத்திற்காக கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு சுமார் 25 கிலோ வரை உடல் எடையை குறைத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று உடல் மெலிந்து முகம் வாடிய இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

எடையை குறைக்கும் நடிகர்கள்: நடிகர்கள் பலரும் தாங்கள் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரத்திற்காக உடல் எடையை குறைத்து நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதில், விக்ரம், கமல், சிம்பு, அஜித் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குறிப்பாக நடிகர் அஜித் வரலாறு, ஆழ்வார், பரமசிவன் போன்ற படங்களில் உடல் எடையை குறைத்து நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். நடிப்பையும் தாண்டி தனக்கு பிடித்த
கார் பந்தயத்திற்காக உடல் எடையை குறைத்திருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Read more about: ajith அஜித்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X