ஒரே நைட்.. அந்த நடிகர் ஏமாத்திட்டார்.. போதைக்கு அடிமையா?.. யாரை சொல்கிறார் அஜித் பட நடிகை?
சென்னை: தமிழ் திரையுலகில் இதயம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹீரா. சென்னையில் பிறந்து வளர்ந்த அவருக்கு இதயம் திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதன்படி காதல் கோட்டை, தொடரும், அவ்வை சண்முகி என ஏராளமான படங்களில் நடித்த அவர் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கினார். இப்போது மீண்டும் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறார் அவர்.
நடிகை ஹீரா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படிப்பை முடித்த அவர் சில பத்திரிகைகளின் அட்டைப் படங்களில் இடம்பெற்றார். அப்படி ஒரு பத்திரிகையை இயக்குநர் கதிர் பார்க்க; முரளியை வைத்து இயக்கிய இதயம் திரைப்படத்தில் ஹீரோயினாகும் வாய்ப்பை கொடுத்தார். தமிழுக்கு முன்னரே அவர் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் இதயம்தான் அவரது முதல் படமாக கருதப்படுகிறது. அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
தமிழில் தொடர்ந்து வாய்ப்பு: இதயம் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதன்படி என்றும் அன்புடன், தசரதன், திருடா திருடா, சதிலீலாவதி, அவ்வை சண்முகி என தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார். கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட், பாலிவுட் என மற்ற மொழிகளிலும் கலக்கிய அவர் கண்டிப்பாக மிகப்பெரிய ரவுண்டு வருவார் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதன்படிதான் அவரும் நடித்துக்கொண்டிருந்தார்.

அஜித்துடன் இரண்டு படங்கள்: அவரது கரியரில் காதல் கோட்டை, தொடரும் ஆகிய இரண்டு படங்கள் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. இரு படங்களில் காதல் கோட்டை மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இந்த இரு படங்களில் அஜித்துடன் சேர்ந்து நடித்தபோது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாகவும், ஆனால் சில காரணங்களால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்றும் இன்றளவும் கிசுகிசுக்கப்படுகிறது. சூழல் இப்படி இருக்க திடீரென அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். கடைசியாக அவர் தமிழில் 1999ஆம் ஆண்டு வெளியான சுயம்வரம் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹீராவின் பதிவு: இந்நிலையில் ஹீராவின் வலைப்பக்கத்தில் அவர் ஒரு பதிவை போட்டதாக சொல்லி சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கின. அதாவது அந்த பக்கத்தில் ஹீரா, "என் மீது இளம் வயதில் திட்டமிட்டு சுமத்தப்பட்ட பழிகளால் மன உளைச்சலுக்கு நான் ஆளானேன். நான் ஒரு நடிகரை பல வருடங்களாக காதலித்தேன். ஆனால் அவரோ நான் ஏமாற்றுக்காரி, போதைக்கு அடிமையாகிவிட்டேன் என்றெல்லாம் பொய் பரப்புரை செய்து அசிங்கப்படுத்தினார்.
ஒரே இரவில் கொடுமையான மனிதர்: என்னுடைய இளம் வயதில் நான் ஒரு நடிகரை காதலித்தேன். அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்திருந்தபோது அவருக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்தேன். அவர் படுத்த படுக்கையாக இருந்தபோது அவரது Bedpan உள்ளிட்டவைகளையெல்லாம் மாற்றினேன். ஆனால் அந்த அறுவை சிகிச்சையிலிருந்து அவர் மீண்ட பிறகு அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அந்த ஒரே இரவில் அவர் கொடுமையான மனிதராக மாறினார்.
ஸ்டூடியோவில் சந்தித்து அழுதேன்: தன்னுடைய படங்கள் மூலம் ரசிகர்களை அவர் வன்முறைக்கு தூண்டுகிறார். என்னுடைய கௌரவம், நேர்மை மீது அவர் தனிப்பட்ட ரீதியான தாக்குதல்களை நடத்தினார். அவை அனைத்தும் என்னை மன வேதனைக்கு உள்ளாக்கியது. இதன் காரணமாக தற்கொலைக்கும் முயன்றேன். என்னுடனான உறவை அவர் எந்த விளக்கமும் இல்லாமல் பிரேக் அப் செய்தார். அதனையடுத்து ஒரு ஸ்டூடியோவில் அவரை சந்தித்தபோது ரொம்பவே அழுதேன். வெளியே உண்மையை சொல்லுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் அவரோ, 'வேலைக்காரி போல் இருக்கும் ஒருவரை திருமணம் செய்துகொள்வேன். எனக்கு யார் வேண்டுமோ அவர்களுடன் சென்று என்னால் இருக்க முடியும்' எனவும் கூறினார்" என ஹீரா குறிப்பிட்டிருந்ததாக இருந்தது.
அந்த அடிகர் அஜித்தா?: ஹீராவின் இந்த பதிவுகள் வெளியான சில மணி நேரத்திலேயே அவரது வலைதள பக்கம் முடக்கப்பட்டது. மேலும் ஹீரா அஜித்தைத்தான் காதலித்தார் என்பது அனைவருக்குமே தெரியும்; அதேபோல் அஜித்துக்குத்தான் முதுகில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது; எனவே ஹீரா குறிப்பிடும் அந்த நடிகர் அஜித்தாகத்தான் இருப்பாரோ என்று ரசிகர்களில் ஒருதரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேசமயம் அந்த வலைப்பக்கமே ஒரு போலியான வலைப்பக்கம். நேற்று அஜித் பத்மபூஷன் விருதினை பெற்றார். எனவே அவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் வேண்டுமென்றே இதனை உருவாக்கி பரப்பிவருகிறார்கள் என்று ஏகே ரசிகர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரம் கோலிவுட்டில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











