ஹீரோ .. ஹீரோ ..
அஜீத்தின் ஆஞ்சநேயா படத்துக்கு புதிய சிக்கல் முளைத்துள்ளது.
இந்தப் படத்தை ஆரம்பித்ததில் இருந்தே படப் பிடிப்புக் குழுவினருக்கு அடுத்தடுத்து பிரச்சனைகள், தடங்கல்கள்.இதுவரை இந்தப் குழுவினர் 12 சாலை விபத்துக்களில் சிக்கியுள்ளனர். சமீபத்தில் நடந்த பயங்கர விபத்தில் உயிர்பிழைத்ததே அதிசயம் என்கின்றனர்.
பத்ரகாளி, நரசிம்மா போன்ற படங்களை எடுத்தபோதும் இதே போன்ற பிரச்சனைகள் ஏற்படனவாம். பத்ரகாளிபடத்தின் கதாநாயகியே விமான விபத்தில் பலியானார். பின்னர் இன்னொருவரை வைத்து படத்தை எடுத்தனர்.
அதே போல நரசிம்மா படத்தை இயக்கிய திருப்பதி சாமியும் கார் விபத்தில் பலியானார்.
இதனால் ஆஞ்சநேயா என்ற படத்தின் பெயரை மாற்றிவிடும்படி கேமரா குழுவினரும் பிற தொழில்நுட்பக்கலைஞர்களும் தயாரிப்பாளர், டைரக்டர் மற்றும் ஹீரோ அஜீத்தை நெருக்கி வருகின்றனர்.
உக்கிரமான சாமிகளின்பெயரை வைத்துப் படம் எடுக்கும்போது ஏகபட்ட தொந்தரவுகள் வரும் என்று தமிழ் சினிமாவில் ஒருசென்டிமெண்ட் உண்டு.
அதையெல்லாம் நினைவுப்படுத்தி மிரட்டிக் கொண்டிருக்கின்றனர். இதனால் படத்தின் தலைப்பு மிக விரைவில்மாறலாம் என்கின்றனர்.
ஆஞ்சநேயா படத்தையே மிகுந்த குழப்பங்களுக்கு இடையில் தான் அஜீத் ஆரம்பித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. ஏற்கனவே எடுக்க முடிவு செய்யப்பட்ட ஜனாவை டிராப் செய்துவிட்டு (கதை சாமி படத்தைப்போலவே இருந்ததால்), மகா படத்தில் புக் ஆகி பின்னர் அந்தப் படப் பிடிப்பையும் ஒத்தி வைத்துவிட்டு,ஆஞ்சநேயாவுக்கு பூஜை போடப்பட்டது.


Click it and Unblock the Notifications











