ஹீரோ .. ஹீரோ ..
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்த ஆசிய கார் பந்தயத்தில் 8வது இடத்தைப் பிடித்தார் நடிகர் அஜீத்.
ஆசியன் பார்முலா பி.எம்.டபிள்யூ சாம்பியன்ஷிப் போட்டி கார் பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் அஜீத்தும், ராஜ் வர்தனும் பங்கேற்றனர்.
மலேசியாவில் நடந்த மூன்றாவது சுற்றுப் போட்டியில் அஜீத் 9வது இடத்தைப் பிடித்தார். இப்ாது முடிவடைந்துள்ள நான்காவது சுற்றுப் போட்டியில் அஜீத் 8வது இடத்தைப் பிடித்துள்ளார். மெதுவாக அவர் முன்னேறி வருகிறார்.
கடந்த ஆண்டு ஜே.கே. டயர் சாம்பியன்ஷிப் போட்டியில் தகுதிச் சுற்றை வென்றதையடுத்து இந்த பி.எம்.டபிள்யூ பார்முலா ரேஸில் பங்கேற்றுள்ளார் அஜீத்.
இதன் அடுத்த சுற்றுப் போட்டி வரும் 20ம் தேதி தாய்லாந்தில் நடக்கிறது. இதிலும் அஜீத் பங்கேற்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications