ஆபரேஷனை மேலும் தள்ளிப் போட்ட அஜீத்.. வெளிநாட்டில் ஒரு மாதம் ஓய்வு!

By Shankar

காலில் ஆபரேஷன் செய்து கொள்ளும் முடிவை மேலும் தள்ளிப் போட்டுள்ளார் அஜீத். ஒரு மாத காலம் வெளிநாட்டில் ஓய்வெடுத்துவிட்டு, பின்னர் கவுதம் மேனன் படத்தில் நடிக்க உள்ளாராம்.

டிசம்பர் 10-ந்தேதி புறப்படும் அஜீத், ஒரு மாதத்துக்குப் பிறகு திரும்புகிறார். அதற்கடுத்த ஒரு மாதம் கழித்து கவுதம் மேனன் படம் தொடங்குகிறது.

ஆரம்பம் படப்பிடிப்பில்..

ஆரம்பம் படப்பிடிப்பில்..

ஆரம்பம் படத்தில் ஒரு சண்டை காட்சியில் அஜீத் நடித்தபோது விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டது. மும்பையில் படமாக்கப்பட்ட அந்த சண்டை காட்சியில் டூப் நடிகரை நடிக்க வைக்குமாறு இயக்குனர் கூறியதை கேட்க மறுத்த அஜீத் , தானே நடித்தார்.

காலில் அடி

காலில் அடி

அந்தக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது, அஜீத்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயம் வெளியில் குணமாகியிருந்தாலும், அவரது எலும்பில் லேசான முறிவு இருப்பதாகவும், அதை ஆபரேஷன் மூலம்தான் சரி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

அறுவைச் சிகிச்சை

அறுவைச் சிகிச்சை

ஆரம்பம் மற்றும் வீரம் படம் முடிந்ததும் இந்த அறுவைச் சிகிச்சையை செய்து கொள்வதாகவும், அதன் பிறகு ஆறு மாதங்களுக்கு எந்த படப்பிடிப்பிலும் அஜீத் கலந்து கொள்ளமாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டது.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

ஆனால் இந்த முடிவை மாற்றிக் கொண்டுவிட்டார் அஜீத். வீரம் வெளியான பிறகு படங்களை முடித்துவிட்டு ஆபரேஷன் செய்து கொள்வதாக கூறினார். தற்போது ஆபரேஷன் செய்து கொள்ளும் முடிவை மேலும் தள்ளி வைத்துள்ளார். கவுதம் மேனன் படத்தை முடித்த பிறகே ஆபரேஷன் செய்து கொள்கிறார்.

ஒரு மாதம் ஓய்வு

ஒரு மாதம் ஓய்வு

வீரம் படத்தின் அனைத்துப் பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டதால், ஓய்வுக்காக ஒரு மாத காலம் வெளிநாட்டுக்குச் செல்கிறார் அஜீத். இதற்காக வரும் டிசம்பர் 10-ம் தேதி அவர் குடும்பத்துடன் புறப்படுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X