தல 57: இரட்டை வேடங்களில் நடிக்கும் அஜீத்?
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு இரட்டை வேடம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
'வீரம்', 'வேதாளம்' படங்களைத் தொடர்ந்து 3 வது முறையாக அஜீத் -சிறுத்தை சிவா கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.
சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் துவங்கும் எனக் கூறப்படுகிறது.

வாலி
எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக அறிமுகமான 'வாலி' படத்தில் அஜீத் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.தொடர்ந்து 'சிட்டிசன்', 'வில்லன்', 'அட்டகாசம்', 'பில்லா', 'அசல்' போன்ற படங்கள் அஜீத் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகின. இதில் 'அசல்' தவிர மற்ற எல்லா படங்களுமே ஹிட்டடித்தது.

தல 57
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு இரட்டை வேடம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இப்படத்தின் ஒப்பந்தத்தில் அஜீத் கையெழுத்திடப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஒப்பந்தம் குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை.

9 வருடங்கள்
இந்நிலையில் 9 வருடங்கள் கழித்து இந்தப் படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு இன்னும் வெளியிடவில்லை, ஆனால் இப்படத்தின் பூஜை நேற்றே முடிந்து விட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.
சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத்தை இசையமைப்பாளராகவும், வெற்றியை ஒளிப்பதிவாளராகவும் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.

சந்தானம்
மற்றொருபுறம் சந்தானம் இப்படத்தில் காமெடியன் வேடத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. முழுநேர ஹீரோவாகி விட்டதால் காமெடியன் வேடங்களில் சந்தானம் தற்போது நடிப்பதில்லை. அஜீத் கேட்டுக் கொண்டதால் இப்படத்திற்காக சந்தானம் தன்னுடைய கொள்கையை தளர்த்திக் கொண்டதாக கூறுகின்றனர். 'கிரீடம்', 'பில்லா', 'வீரம்' படங்களில் அஜீத்துடன் இணைந்து சந்தானம் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











