ஆர்யாவின் ‘யட்சன்’ படத்தில் கெஸ்ட் ரோலில் அஜீத்?

சென்னை: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் யட்சன் படத்தில் அஜீத் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், ஆரம்பம் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் விஷ்ணுவர்தனும், ஆர்யாவும் இணைந்திருக்கும் படம் யட்சன். இப்படத்தில் ஆர்யாவுடன் இன்னொரு ஹீரோவாக விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணாவும் நடிக்கிறார்.

யுடிவியும், விஷ்ணுவர்தனும் இணைந்து படத்தை தயாரித்து வருகின்றனர்.

அஜீத் ரசிகர்...

அஜீத் ரசிகர்...

ஆரம்பம் படத்தைத் தொடர்ந்து விஷ்ணுவர்தனும், ஆர்யாவும் அஜீத் ரசிகர்களாகி விட்டனராம். அதன் எதிரொலியாக யட்சன் படத்திலும் அஜீத் ரசிகராகவே நடிக்கிறார் ஆர்யா.

கெஸ்ட் ரோல்...

கெஸ்ட் ரோல்...

எனவே, யட்சன் படத்தின் காட்சி ஒன்றில் அஜீத் நேரடியாக தோன்றி நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கருதுகிறாராம் விஷ்ணுவர்தன். தனது விருப்பத்தையும் அஜீத்திடம் அவர் தெரிவித்தாராம்.

அஜீத் உறுதி ?

அஜீத் உறுதி ?

தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் தல55 படத்தில் நடித்து வரும் அஜித், அதை முடித்து விட்டு 'யட்சன்' படத்தில் நடிப்பதாக விஷ்ணுவர்தனுக்கு உறுதி அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீதேவி படத்தில்...

ஸ்ரீதேவி படத்தில்...

முன்னதாக ஸ்ரீதேவி நடித்த 'இங்லீஷ் விங்லீஷ்' படத்தில் நட்புக்காக ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார் அஜித். எனவே, தற்போதும் நட்புக்காக ஆர்யா படத்தில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X