Ajith: அஜித் - பிரசாந்த் நீல் கூட்டணி... முதல் ரவுண்ட் ஓவர்... அடுத்தக் கட்டத்துக்குப் போகும் AK 65
சென்னை: விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் இணைகிறார். இதனிடையே கேஜிஎஃப், சலார் படங்கள் மூலம் பிரபலமான பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இக்கூட்டணி குறித்து மேலும் சில தரமான அப்டேட்ஸ் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் வைரலாகி வருகின்றன.
உறுதியாகும் அஜித் - பிரசாந்த் நீல் கூட்டணி
அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படம், அஜித் பிறந்தநாளை முன்னிட்டு மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தில் நடித்ததும் உடனடியாக ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் இணைகிறார் அஜித். அதன்படி, அஜித்தின் ஏகே 63 பட ஷூட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது..

இந்த நிலையில் தான் அஜித்தின் ஏகே 64 படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இக்கூட்டணி குறித்து இன்னும் உறுதியான முடிவுகள் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் அஜித்தின் ஏகே 65 படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகின. கேஜிஎஃப் 1, கேஜிஎஃப் 2, சலார் படங்கள் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் இயக்கும் படங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
கேங்ஸ்டர் பின்னணியில் செம்ம மாஸ்ஸான ஆக்ஷன் படங்கள் எடுப்பதில் கில்லாடி இந்த பிரசாந்த் நீல். கன்னடத்தில் இருந்து சலார் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிவிட்டார். அடுத்தும் தெலுங்கு ஹீரோ ஜூனியர் NTR நடிப்பில் ஒரு ஆக்ஷன் ட்ரீட் கொடுக்க ரெடியாகிவிட்டார். இந்தப் படம் முடிந்ததும் அங்கிருந்து நேராக கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்க ரெடியாகிவிட்டாராம் பிரசாந்த் நீல். அதன்படி தான் அஜித்தின் ஏகே 65 படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
அதனடிப்படையில் தற்போது அஜித் - பிரசாந்த் நீல் இணையும் ஏகே 65 படத்துக்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை தற்போது நடந்து முடிந்துள்ளதாம். அதில், ஏகே 65 படத்தின் கதை, மேக்கிங் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் அஜித்திடம் இருந்து பிரசாந்த் நீலுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படத்தையும் ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிக்கலாம் என தெரிகிறது.
அஜித் - வெற்றிமாறன் கூட்டணி இணைவது இன்னும் உறுதியாகவில்லை. இதனால் NTR 31, கேஜிஎஃப் 3, சலார் 2 படங்களை முடித்ததும் அஜித்துடன் பிரசாந்த் நீல் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையென்றால் NTR 31 முடிந்ததும் இக்கூட்டணி இணையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை அஜித் - பிரசாந்த் நீல் இணைந்தால் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை ஏகே 65 பிரேக் செய்யும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











