ரஜினிக்காக தயார் செய்த கதையில் அஜீத்?
ரஜினிக்காக கேவி ஆனந்த் தயார் செய்த கதை இப்போது அஜீத்துக்குப் போகிறதாம்.
ரஜினியின் அடுத்த படம் என்ன என்ற கேள்வி கடந்த மூன்று ஆண்டுகளாகக் கேட்கப்பட்டு வருகிறது மீடியாவில்.

மாறி மாறி
ஒரு நாள் இயக்குநர் ஷங்கருக்குப் படம் பண்ணுவார் என்றும், இன்னொரு நாள் கேவி ஆனந்துக்குப் படம் பண்ணுவார் என்றும், இல்லையில்லை கே எஸ் ரவிக்குமார் இயக்குகிறார் என்றும் மாறி மாறி தகவல் வெளியாகி வருகிறது.

ரஜினி மவுனம்
ரஜினியோ இதுபற்றி எதுவும் பேசாமல் மவுனமாக காக்கிறார். ஆனால் மேற்சொன்ன மூவரிடமும் அவர் கதை கேட்டிருப்பது மட்டும் உண்மை என்கிறார்கள்.

கேவி ஆனந்த்
ரஜினிக்கு தனது கதையில் பிடிப்பில்லை என்பது தெரிந்ததுமே, கே ஆனந்த் தனுஷை வைத்து புதுப்படம் தொடங்கிவிட்டார். ரஜினிக்காகத் தயார் செய்த கதையில் அவர் இப்போது அஜீத்தை நடிக்க வைக்கப் போகிறாராம்.

அப்போ ஷங்கர்?
இயக்குநர் ஷங்கரும் ஒரு கதையை ரஜினிக்கு சொல்லியிருக்கிறார். ஆனால் இப்போதைக்கு கே எஸ் ரவிக்குமார் - ராக்லைன் வெங்கடேஷ் ப்ராஜெக்டுக்கு மட்டும் ஓகே சொல்லியிருக்கிறாராம் ரஜினி.


Click it and Unblock the Notifications











