விஸ்வாசம் வெற்றி.. தல ரியாக்ஷன் என்ன தெரியுமா?
விஸ்வாசம் பட வெற்றியால் நடிகர் அஜித் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
Recommended Video

சென்னை: விஸ்வாசம் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் நடிகர் அஜித் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். பொங்கலையொட்டி நேற்று ரிலீசான இப்படத்திற்கு மக்களிடையே நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விஸ்வாசம் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையுமே திருவிழாவாக கொண்டாடி வந்த அஜித் ரசிகர்கள், நேற்று ரிலீசையும் பிரம்மாண்டமாக கொண்டாடினர்.
இந்நிலையில், விஸ்வாசம் படத்தை ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடி வருவது பற்றி அஜித்திடம் பேசினாராம் சத்யஜோதி தியாகராஜன். அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த அஜித், 'எல்லாமே கடவுள் செயல்' எனக் கூறினாராம்.
'ரசிகர்களால் கொண்டாடப்படும் எவ்வளவு பெரிய நடிகரான அவர் எப்போதுமே மிகவும் எளிமையாகத்தான் இருப்பார்' என அஜித்தை தியாகராஜன் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











