தார் பாலைவனத்தில்... பைக்கின் நிழலில் ஓய்வெடுத்த அஜித்… வைரலாகும் போட்டோஸ்!

சென்னை : தார் பாலைவனத்தில் பைக்கை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கும் அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள அஜித், அடுத்த படத்தை தொடங்குவதற்கு முன் தனது நீண்ட நாள் கனவான உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுப் பயணத்தை அஜித் தொடங்கிவிட்டார்.

ஏற்கனவே ரஷ்யாவில் ஒரு பயணத்தை முடித்திருந்த அஜித், தனது அடுத்த பயணத்தை இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கினார்.

வலிமை

வலிமை

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

பைக் ரேஸ் பிரியர்

பைக் ரேஸ் பிரியர்

தல அஜித் எந்த அளவுக்கு பைக் ரேஸ் பிரியர் என்பது, அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். ஷூட்டிங் இல்லாத நாட்களில், பெரிதாக வெளியில் தலை காட்டாமல் இருந்த தல அஜித், சமீபத்திய காலங்களில், ரிஃபில் ஷூட்டிங், மற்றும் பைக் ரேஸ் போன்றவற்றிற்காக வெளியில் வருவதை பார்க்க முடிகிறது.

யாசர்லூ வை சந்தித்தார்

யாசர்லூ வை சந்தித்தார்

வலிமை பட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா சென்ற அஜித், அங்குள்ள பைக் ரேஸர்களுடன் சேர்ந்து சுமார் 5000 கிலோ மீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார். அப்போது, பைக்கில் 67 நாடுகளை சுற்றி வந்த சாகச பெண் யாசர்லூ வை சந்தித்து, பல நாடுகளுக்கு பைக் டிராவல் செய்த அனுபவங்களை பேசிய அஜித்தின் படங்களும் வைரலாகின.

வாகா எல்லையில்

வாகா எல்லையில்

தற்போது தனது பயணத்தை மீண்டும் தொடங்கிய அஜித், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லைக்குச் சென்ற அஜித், அங்கு தேசியக்கொடி ஏந்தி நின்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

பைக்கின் நிழலில்

பைக்கின் நிழலில்

இந்நிலையில், தற்போது இணையத்தில் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில், நேபாள தலைநகர் காட்மாண்டு சென்று திரும்பும் வழியில் உள்ள தார் பாலைவனத்தில் அஜித் ஓய்வெடுக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. பைக்கில் நிழலில் சாய்ந்தவாறு அமர்ந்து தண்ணீர் குடிக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

கனவை நனவாக்குகிறார்

கனவை நனவாக்குகிறார்

அதேபோல தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித் பயணம் செய்யும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும், தன்னுடைய விருப்பப்படி வாழ்வதிலிருந்தும், தன்னுடைய ஒவ்வொரு கனவையும் நனவாக்குவதிலிருந்தும் அஜித்தை எதுவும் தடுக்க முடியாது. அஜித் உலகம் முழுவதும் விரும்பப்படுகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X