நான் கடவுள் விவகாரம்.. அஜித்தை விரட்டிவிட்ட பாலா.. பில்லா ஸ்டைலில் தரமான சம்பவம் செய்த அஜித்!
சென்னை: தமிழ் சினிமா தவிர்க்க முடியாத இயக்குநர்களில் பாலாவும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் கால் பதித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இதுவரை 8 படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார். அதில், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். தமிழ் சினிமா கண்ட இயக்குநர்களில் தனி ரகமான பாலா இயக்கத்தில் உருவான நான் கடவுள் படத்தில், முதலில் நடிக்க இருந்தது அஜித் தான் என்றும், பின் அவரை பாலா நீக்கிவிட்டதாகவும், இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
2009ஆம் ஆண்டு பாலா இயக்க்ததில் வெளியான திரைப்படம் நான் கடவுள். இப்படத்தில் ஆர்யா, பூஜா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எழுத்தாளர் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை அடிப்படையாக் கொண்டு நான் கடவுள் திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் இடம் பெற்ற பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தான் என்ற பாடலை பார்த்து கண்கலங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு ஒரு உணர்வு பூர்வமான இசையை இசைஞானி கொடுத்து இருப்பார்.

நான் கடவுள்: சாதாரண கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வந்த ஆர்யா, நான் கடவுள் படத்திற்காக பல முயற்சிகளை செய்து அனைவரும் வியந்து போகும் அளவிற்கு நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு ஆர்யாவின் புகழ் உச்சிக்கு சென்றது. இந்த புகழ் அனைத்தும் அஜித்திற்கு வர வேண்டியதாம். நான் கடவுள் படத்தில், முதலில் அஜித்குமார் நடிப்பதாக இருந்தது. இதற்காக அவர் முடியை வளர்ந்து தயாரிக் கொண்டிருந்தாராம். ஆனால், அப்போது, பாலாவிற்கும் அஜித்திற்கும் இடையே சண்டை வந்ததை அடுத்து, பாலா அஜித்தை அடித்துவிட்டதாகவும், இதனையடுத்து அந்த கூட்டணி முறிந்து விட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்தன.

பத்திரிக்கையாளர் விளக்கம்: இதுகுறித்து, யூடியூப் சேனல் ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், பாலாவிற்கும் அஜித்திற்கு பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து அஜித்தை பாலா நீக்கிவிட்டார். இதற்காக அஜித்திற்கு ஒரு கோடி ரூபாய் முன்பணம் கொடுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து பேச்சு வார்த்தை சென்னை பாம்க்ரோ ஓட்டலில் நடந்தது. அப்போது, அன்புச்செழியன் அவர்களும், பி எல் தேனப்பன் அவர்களும் உடன் இருந்தனர். அப்போது, முன் பணமாக கொடுத்த ரு கோடியை வட்டியுடன் தரும்படி அன்புச்செழியன் கேட்டார். அப்போது, அஜித் படம் தாமதமானதத்திற்கு காரணம் நான் இல்லை, பாலா தான் என்று வாக்கு வாதம் செய்தார் அஜித்.

அஜித் செய்த தரமான சம்பவம்: கடைசியில் அஜித்திற்கு அவர்கள் நெருக்கடி கொடுத்ததால், பணத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அஜித் தள்ளப்பட்டார். இதையடுத்து, உங்களுக்கு என்ன வட்டி தானே அதையும் நானே கொடுத்து விடுகிறேன் என்று 1 கோடி ரூபாய் முன் பணத்தையும் வட்டியுடன் சேர்த்து கொடுத்தார். அதாவது, பில்லா ஸ்டைலில் கொடுத்தார். அதைப்பார்த்து இங்கிருந்த அனைவரும் பின்வாங்கினார்கள் என்று பத்திரிக்கையாளர் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.



Click it and Unblock the Notifications











