மீண்டும் கார் ரேஸில் அஜீத்!

By Staff

Ajith returns to car race
கார் ரேஸும் அஜீத்தும் எந்த அளவு நெருக்கம் என்பது தமிழ் ரசிகர்களுக்கு நன்கு தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்பு 6 மாதம் ரேஸ், 6 மாதம் நடிப்பு என்று முடிவு செய்யும் அளவுக்கு கார் பந்தயத்தில் தீவிரமாக இருந்தார் அஜீத்.
இந்த நேரத்தில்தான் அவரது படங்கள் வரிசையாக தடுமாறத் தொடங்கின.

உடனே, ரேஸில் கவனம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு அவருக்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அஜீத் மனைவி ஷாலினியின் உறவினர்கள் செய்த அட்வைஸ்படி கார் ரேஸுக்கு பை சொன்னார் அஜீத்.

அதற்குப் பதில், குட்டி விமானங்கள் இயக்குவதை பொழுது போக்காக மாற்றிக் கொண்டார். இந்த நிலையில், இப்போது மீண்டும் கார் ரேஸுக்கு திரும்பியுள்ளார் அஜீத்.

சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் இன்று நடந்த எம்ஆர்எப் 1600 பார்முலா கார் பந்தயத்தில் அஜீத் கலந்து கொண்டு கார் ஓட்டினார். ஏற்கெனவே இதற்கான பயற்சிப் போட்டிகளிலும் இரு தினங்கள் தொடர்ந்து கலந்து கொண்டார் அஜீத்.

அவருக்கு எம்ஆர்எப் பிராண்ட் அம்பாஸிடர் நரேன் கார்த்திகேயன் உதவி செய்தார்.

இன்று காதலர் தினம் என்பதால் அஜீத் கார் ஓட்டுவதைக் காண எக்கச்சக்க இளைஞர்கள் ஜோடி ஜோடியாக் குவிந்து விட்டனர் இருங்காட்டுக் கோட்டையில்.

இதுதான் 'அசல்' அஜீத்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X