பைக், காரில் இருந்து போட்டுக்கு தாவிய அஜீத்

By Siva

சென்னை: விஷ்ணுவர்தன் படத்திற்காக அஜீத் குமார் படகு ஓட்டி சாகசம் செய்துள்ளார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோர் ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் அஜீத் குமார் ஹேக்கராக நடிக்கிறார். அதனால் படத்திற்கு வலை என்று பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. படத்தின் பெயரை எப்போது அறிவிப்பார்கள் என்று அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்த படத்தில் அஜீத் கார், பைக் ஆகியவற்றில் சாகசம் செய்தார். இந்நிலையில் படகிலும் சாகசம் செய்துள்ளார்.

மும்பையில் காரில் சாகசம்

மும்பையில் காரில் சாகசம்

மும்பையில் ஷூட்டிங் நடந்தபோது ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அஜீத் ஒரு காரில் இருந்து இன்னொரு காருக்கு தாவுவது போல அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருந்து. அப்போது டூப் வேண்டாம் என்று கூறி தானே நடித்த அஜீத் 25 அடி தூரத்துக்கு மேல் ஒரு காரிலிருந்து அடுத்த காருக்கு தாவினார். அப்படி தாவி இன்னொரு காரின் பேனட் மீது விழுந்த போது, அவரது வலது கால் முன்பக்க டயரில் சிக்கியது. இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது.

டுகாட்டியில் சாகசம்

டுகாட்டியில் சாகசம்

இந்த படக்குழுவினர் தற்போது துபாயில் முகாமிட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜீத் 210 கிலோ எடையுள்ள 1,200 சிசி டுகாட்டி டயாவெல் பைக்கை ஓட்டி சாகசம் செய்யும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த பைக்கை எல்லோரும் ஓட்டிவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டில் சாகசம்

போட்டில் சாகசம்

அஜீத் குமார் படகில் சாகசம் செய்யும் காட்சி படமாக்கப்பட்டபோது அவர் மிகவும் திறமையாக படகை ஓட்டியதாக சண்டை பயிற்சியாளர் லீ விட்டேக்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவரின் ட்வீட், "துபாயில் அருமையான படகு சாகசக் காட்சி. அஜீத் அருமையாக நடித்திருந்தார். அவரது அபாரத் திறமையில்லாமல் இந்த காட்சியை படமாக்கியிருக்க முடியாது. இன்னும் இரண்டு நாட்கள் அதன் பிறகு வீடு" என்று தெரிவித்துள்ளார். இந்த லீ விட்டேக்கர் கமலின் விஸ்வரூபம் படத்திலும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X