என்னது ஏகே61 படத்தோட டைட்டில் இதுவா... சூப்பரா இருக்கே!

சென்னை : நடிகர் அஜித்தின் வலிமை, சூறாவளியாய் ரசிகர்களை தாக்கிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக ஏகே 61 படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களை மையம் கொண்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் தலைப்பு குறித்த தகவல்கள் சமூகவலைதளங்களில் உலா வந்துக் கொண்டிருக்கிறது.

அஜித்தின் வலிமை

அஜித்தின் வலிமை

நடிகர் அஜித்தின் வலிமை படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியானது. ஒரே நேரத்தில் 4000 திரையரங்குகளில் படம் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.

வசூல்வேட்டையில் வலிமை

வசூல்வேட்டையில் வலிமை

ஒரே வாரத்தில் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ள இந்தப் படம். அதிகமான பைக் ரேசிங் காட்சிகள், கூடுதல் சென்டிமெண்ட் என்று படத்தை கலவையான விமர்சனங்களால் தாக்குபவர்கள் கூட குடும்பத்தினருடன் படத்தை சென்று பார்த்து வருகின்றனர். இதற்கு அதிகமான வசூல்வேட்டையே சாட்சி.

3வது முறையாக கூட்டணி

3வது முறையாக கூட்டணி

நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து வலிமை படத்தின்மூலம் அஜித் -ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்தது. இந்நிலையில் இந்த கூட்டணி மூன்றாவது முறையும் தற்போது ஏகே 61 படத்தில் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அஜித்தின் லுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து போனிகபூர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.

அஜித்தின் புதிய லுக்

அஜித்தின் புதிய லுக்

இந்நிலையில் சமீபத்தில் தனது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் இந்த லுக்குடன் காணப்பட்டார். இந்தப் புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப் படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் வில்லனாகவும் அதேநேரத்தில் ஹீரோவாகவும் அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 9ம் தேதி பூஜை?

9ம் தேதி பூஜை?

இந்நிலையில் வரும் 9ம் தேதி படத்தின் பூஜை பிரம்மாண்டமான அளவில் நடைபெறவுள்ளதாகவும், 19ம் தேதி ஐதராபாத்தில் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐதராபாத்தில் சென்னை மவுண்ட் ரோடின் செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் டைட்டில்

படத்தின் டைட்டில்

வரும் 19ம் தேதி சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், அன்றைய தினமே படத்தின் டைட்டிலை படக்குழு அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டில் 'வல்லமை' என்று கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X