ஊருக்கெல்லாம் பிரியாணி சமைக்கும் 'தல' என்ன சாப்பிடுகிறார் தெரியுமா?
சென்னை: படக்குழுவுக்கெல்லாம் பிரியாணி சமைத்துக் கொடுக்கும் அஜீத் வேக வைத்த காய்கறிகளை சாப்பிடுகிறாராம்.
மங்காத்தா படத்தில் இருந்து தான் நடிக்கும் படங்களில் வேலை செய்பவர்களுக்கு தனது கையால் பிரியாணி சமைத்து போடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அஜீத். அஜீத்தின் பிரியாணியை சாப்பிட்டவர்களும் அதை புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

படப்பிடிப்பு தளத்தில் ஏராளமான ஸ்டண்ட் ஆட்களும், டான்ஸர்களும் இருக்கையில் பிரியாணி சமைத்துக் கொடுப்பாராம் அஜீத். பிறருக்கு ருசியாக அசைவ உணவை சமைத்துக் கொடுத்தாலும் அவர் சைவ உணவை சாப்பிடுகிறாராம்.
அஜீத் மெக்சிகன் வகை உணவுகளை சமைப்பதிலும் வல்லவராம். அவர் தினமும் வேக வைத்த காய்கறிகளை சரியான நேரத்தில் சாப்பிட்டு வருகிறாராம். காய்கறிகள் தவிர சூப், பால் இல்லா டீ குடிக்கிறாராம்.
'தல' கொக்க கோலா, பெப்ஸியை தொடுவதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











