'அஜித்தை புரிந்துகொள்ள இந்த ஒரு காட்சி மட்டும் போதும்'... வைரலாகும் வீடியோ!

அரசியல் நிலைபாடு குறித்த அஜித்தின் அறிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Ajith statement on politics | ஒரே நாளில் அரசியல் புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜீத்!

சென்னை : தனது அரசியல் நிலைபாடு குறித்து நடிகர் அஜித் திரைப்படங்களில் பேசிய வசனங்கள் வைரலாகி வருகிறது.

அஜித் ரசிகர்களை குறிவைத்து தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. இருதினங்களுக்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு அஜித் மற்றும் அவரது ரசிகர்களின் ஆதரவு இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டது.

இது அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று இதுகுறித்து விளக்கம் அளித்த அஜித், தான் எந்த கட்சியையும் சார்ந்து இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். மேலும் தனது ரசிகர்களையும் எந்த குறிப்பிட்ட கட்சிக்கும் ஆதரவு தர தான் வற்புறுத்தமாட்டேன்' என்றும் கூறினார்.

விவாத பொருளான அறிக்கை

விவாத பொருளான அறிக்கை

அஜித்தின் இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. அஜித் நடித்த படங்களில் தனது அரசியல் நிலைபாடு குறித்து அஜித் பேசிய வசனங்களை அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஜனா திரைப்பட வசனம்

அப்படி ஜனா திரைப்படத்தில் அஜித் பேசும் வசனம் தற்போது வைரலாக மாறியுள்ளது. அந்த படத்தில் தனக்கு பதவி ஆசை இல்லை என்றும் தன்னை இப்படியே விட்டுவிடுங்கள் என அஜித் பேசுவதாக இருக்கிறது. அஜித்தின் அறிக்கையுடன் இதை தொடர்புபடுத்தி, அன்றும் சொன்னதை தான் அஜித் இன்றும் சொல்கிறார் என ரசிகர்கள் புலங்காகிதம் அடைகிறார்கள்.

தொலைக்காட்சி பேட்டி

இதேபோன்று தனியார் தொலைக்காட்சிக்கு அஜித் அளித்த பேட்டி ஒன்றும் வைரலாகியுள்ளது. ரசிகர்கள் குறித்து அஜித்திடம், நடிகர் சந்தானம் கேட்கும் கேள்விக்கு, அவர் அளிக்கும் பதிலை பதிவு செய்து, "2007 ல சொன்னது தான் இப்பவும் சொல்லி இருக்காரு தல தல தான் இந்த மாறி எவன் பேசியும் கேட்டது இல்ல தனி மனித ஒழுக்கம்!!! #வாழு வாழ விடு", என இந்த ரசிகை குறிப்பிட்டுள்ளார்.

வாழு வாழ விடு

அஜித் தனது அறிக்கையின் இறுதியில், 'வாழு வாழ விடு' எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் ஹேஷ்டேக் போட்டு டிவிட்டரில் டிரெண்டிங்காக்கியுள்ளனர். ஏராளமான அஜித் ரசிகர்கள், இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தி தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X