twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜீத்தின் கடைசி 5 படங்களின் வசூல் நிலவரம்... உண்மையும் பொய்களும்!

    By Shankar
    |

    அஜீத் படங்களுக்கு பெரிய ஓபனிங் உண்டு என சினிமாக்காரர்கள் சொல்கிறார்களோ இல்லையோ... அவர் படங்கள் வெளியாகும்போதெல்லாம் சில பத்திரிகைகள் எழுதுவது வழக்கம்.

    இவர்கள் சொல்வது போல ஆரம்ப வசூல் அமோகமாக இருந்தாலும், நிலைத்து ஓடும் நாட்கள் எண்ணிக்கை குறைவுதான். வசூலும்தான். இதுவரை மங்காத்தா உள்ளிட்ட அஜீத்தின் எந்தப் படமும் ரூ 100 கோடியை வசூலித்ததில்லை என்பதே பாக்ஸ் ஆபீஸ் சொல்லும் உண்மை.

    அஜீத்தின் கடைசி 5 படங்களில் வசூல் விவரங்களைப் பார்க்கலாம்...

    பில்லா 2

    பில்லா 2

    சக்ரி டோலட்டி இயக்கத்தில் வந்த பில்லா 2 அஜீத்தின் பெரிய தோல்விப் படங்களுள் ஒன்று. இந்தப் படத்துக்கும் ஆரம்ப வசூல் ஓஹோ எனப் புகழ்ந்து தள்ளினர் சிலர். ஆனால் படம் பெரிய நஷ்டம். ரூ 32 கோடிதான் வசூலானது. ஆனால் ரூ 60 கோடி வரை வசூலித்ததாக தவறான தகவல்களைப் பரப்பினார்கள்.

    ஆரம்பம்

    ஆரம்பம்

    விஷ்ணு வர்தன் இயக்க, ஏ எம் ரத்னம் தயாரித்த இந்தப் படம் வெளியான சில தினங்களிலேயே ரூ 100 கோடி வசூலித்துவிட்டதாக பொய்த் தகவல்கள் பரவ, ஏ எம் ரத்னம் பெரும் சிக்கலுக்கு உள்ளானார். ரூ 50 கோடியில் தயாரான இந்தப் படத்தால் தயாரிப்பாளருக்கு பெரிய லாபமில்லை. அனைத்து வழிகளிலும் இந்தப் படம் வசூலித்தது ரூ 60 கோடிதான்!

    வீரம்

    வீரம்

    கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்தப் படத்தை சிவா இயக்கியிருந்தார். விஜயா நிறுவனம் தயாரித்தது. இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ 52 கோடி. வசூலானது ரூ 45 கோடி. விஜயா நிறுவனத்துக்கு 7 கோடி ரூபாய் நஷ்டம் என்று தகவல் வெளியானது.

    என்னை அறிந்தால்

    என்னை அறிந்தால்

    கவுதம் மேனன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது இந்தப் படம். கலவையான விமர்சனங்கள். இதுவும் ஏஎம் ரத்னம் தயாரிப்புதான். ரூ 50 கோடி பட்ஜெட். பெரிய ஓப்பனிங் என்று கூறப்பட்டாலும், அடுத்த சில தினங்களிலேயே காலி அரங்குகளைப் பார்க்க முடிந்தது. ஆரம்பம் மாதிரியே இந்தப் படத்திலும் சில கோடிகள் தேறின தயாரிப்பாளருக்கு. மொத்த வசூல் ரூ 62 கோடி.

    வேதாளம்

    வேதாளம்

    இந்தப் படம் தீபாவளிக்கு வெளியானது. வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்டது. அஜீத்தின் ரசிகர்கள் இந்தப் படம் மூன்றாவது நாளே ரூ 100 கோடியைத் தாண்டிவிட்டது என சமூக வலைத் தளங்களில் எழுதினார்கள். இன்று பத்தாவது நாளிலும் மீண்டும் ரூ 100 கோடியைத் தாண்டியது என எழுதியுள்ளனர். அடுத்த பத்தாவது நாளும் இதையே எழுதுவார்கள் போலிருக்கிறது. இந்தப் படம் வெளியான எட்டாவது நாளில் ரூ 57 கோடியை வசூலித்திருந்தது. அதை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

    தயாரிப்பாளர் மறுப்பு

    தயாரிப்பாளர் மறுப்பு

    இதுகுறித்து தயாரிப்பாளர் ஏ எம் ரத்னத்திடம் விசாரித்தபோது, வசூல் குறித்து வரும் செய்திகள் அனைத்துமே பொய் என்றார். விரைவில் தாமே அந்த விபரத்தைச் சொல்லப் போவதாகவும் கூறினார்.

    English summary
    Here is the box office facts on Ajith's last 5 movies Billa 2, Aarambam, Veeram, Ennai Arinthaal and Vedalam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X