மீண்டும் பைக் உடன் நடிகர் அஜித்.. நீண்ட தாடியுடன் செம மாஸ் லுக்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்.
Recommended Video
வலிமை படத்தில் க்ளீன் ஷேவ் லுக்கில் நடித்த நடிகர் அஜித், இந்த படத்தில் நீண்ட வெள்ளை தாடி மற்றும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல் லுக்குடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நீண்ட தூரம் டிராவல் செய்யும் பைக் உடன் நடிகர் அஜித் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

பைக் ரேஸர்
நடிகர் அஜித் ரியல் லைஃப்பிலேயே பைக் மற்றும் கார் ரேஸர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை படத்தில் பைக் ரேஸராக இருந்து போலீசாக மாறிய கதாபாத்திரத்தில் அஜித் நடித்து அசத்தி இருந்தார். ஸ்டன்ட் காட்சிகளுக்கு மெனக்கெட்ட அளவுக்கு திரைக்கதைக்கு மெனக்கெட்டு இருந்தால் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கும்.

ரசிகர்களுடன் அஜித்
இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் தனது ரசிகர்களுடன் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. கோட் சூட் அணிந்து கொண்டு வெள்ளை தலைமுடி மற்றும் நீண்ட தாடி என வித்தியாசமாக காட்சியளிக்கிறார்.

மீண்டும் பைக் உடன்
வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், நடிகர் அஜித் சென்னை டு டெல்லி என ஒரு பெரிய பைக் டூர் சென்று வந்தார். இந்நிலையில், ஏகே 61 படப்பிடிப்பு தொடங்கி உள்ள நிலையில், நடிகர் அஜித் மீண்டும் டிராவல் பைக் உடன் இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

பைக் ரேஸ் இருக்குமா
வலிமை படம் முழுக்க ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு நடிகர் அஜித்தின் அட்டகாசமான பைக் ரேஸ் காட்சிகள் படம் முழுக்க நிறைந்து இருந்தன. இந்நிலையில், ஏகே 61 படம் வங்கி கொள்ளை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், பேங்க் ஹெய்ஸ்ட்டுக்கு பிறகு நடிகர் அஜித் பைக்கில் தப்பிச் செல்வது போல ஒரு ரேஸ் காட்சி இருக்குமா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

வி டைட்டில்
வி டைட்டிலில் படங்களில் நடித்து வரும் நடிகர் அஜித் வினோத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் என இயக்குநர் பெயர்களையும் ‘வி' எழுத்தில் தொடங்குவது போல சூஸ் செய்திருப்பதை பார்த்து பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே 61 படத்திற்கு வேடன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











