துப்பாக்கியை கையில் எடுத்த அஜித்: தீயாக பரவிய புகைப்படம்
Recommended Video

சென்னை: அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் பிங்க் பட ரீமேக்கில் நடிக்கிறார். தற்போதைக்கு தல 59 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.
அஜித் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
அஜித்
அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது எடுத்த புகைப்படத்தை நடிகை ஆர்த்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.
ரசிகர்கள்
அஜித்திடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்கியபோது எடுக்கப்பட்ட வீடியோவை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
விஸ்வாசம்
விஸ்வாசம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் 25வது நாளை சேலம் ரசிகர்கள் கொண்டாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
என்னை அறிந்தால்
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் ரிலீஸாகி 4 ஆண்டுகள் ஆனதை தல ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











