பெப்பர் முடி, சால்ட் தாடி: வைராலகும் அஜீத் போட்டோ
Recommended Video

சென்னை: அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
விவேகம் படத்தை அடுத்து அஜீத் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கிறார். வழக்கத்திற்கு மாறாக படத் தலைப்பை முன்கூட்டியே அறிவித்துவிட்டார் சிவா.
இருப்பினும் படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லை.
புகைப்படம்
விசுவாசம் படத்தில் அஜீத் கருப்பு நிற முடியுடன் வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மகிழ்ச்சி
அஜீத்தின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த தல ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
தல
அஜீத்தின் சமீபத்திய புகைப்படத்தை வைத்து மீம்ஸும் போட்டுவிட்டார்கள். சூர்யாவின் ஏழாம் அறிவு ஸ்டில்லை வைத்து அஜீத் பற்றி மீம்ஸ் போட்டுள்ளனர்.

விஜய்
ஏ.ஆர். முருகதாஸ் விஜய் படத்தின் படப்பிடிப்பை துவங்கிவிட்டார். ஆனால் சிவா இன்னும் விசுவாசம் படப்பிடிப்பை துவங்கவில்லை. ட்விட்டர் பக்கத்திலும் எந்த தகவலும் இல்லை. இதனால் ரசிகர்கள் லைட்டா கடுப்பாகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











