அஜித் சார், எங்களுக்கும் ஒரு கார்டு கிடைக்குமா?... ஆசையாக கேட்கும் ரசிகர்கள்

சென்னை : அஜித் தற்போது தான் நடித்து வரும் ஏகே 61 படத்திற்கு பிரேக் எடுத்துக் கொண்டு, ஐரோப்பாவில் பைக் டூர் சென்றுள்ளார். இந்த டூரில் அஜித் பற்றி எந்த போட்டோ வெளியே வந்தாலும் அது டிரெண்டாகி வைரலாகி விடுகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து தற்போது ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார் அஜித், ஐதராபாத்தில் ஏப்ரல் மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த ஷுட்டிங் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்றது.

ஐதராபாத்தில் போடப்பட்ட மவுண்ட் ரோடு வங்கிக் கிளை போன்ற செட்டிலேயே 80 சதவீதம் ஷுட்டிங்கை முடித்து விட்டார்களாம். நடிகர் வீரா ஏற்கனவே தனது போர்ஷன்களை நடித்து முடித்து விட்டாராம்.

 அஜித்தின் ஐரோப்பா டூர்

அஜித்தின் ஐரோப்பா டூர்

தற்போது ஷுட்டிங்கிற்கு பிரேக் எடுத்துக் கொண்டு ஐரோப்பாவில் தனது ஃபேவரைட் பிஎம்டபிள்யூ பைக்கை எடுத்துக் கொண்டு பைக் ரைடு சென்று விட்டார் அஜித். பெல்ஜியம், லண்டன் உள்ளிட்ட நகரங்களில் சுற்றித் திரிந்த அஜித், ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் வெளியாகி செம வைரலாகின.

மீண்டும் ஏகே 61 ஷுட்டிங்

மீண்டும் ஏகே 61 ஷுட்டிங்

இந்த சமயத்தில் விரைவில் அஜித் ஐரோப்பா டூரை முடித்துக் கொண்டு இந்தியா திரும்ப உள்ளாராம். அஜித் திரும்பி வந்ததும் ஜுலை மாத இரண்டாவது பாதியில் ஏகே 61 படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங்கை புனேயில் துவக்க போகிறார்களாம். புனேயில் நடத்தப்பட உள்ள ஏகே 61 ஷுட்டிங்கிற்காக அங்கும் ஒரு பிரம்மாண்ட செட் ரெடியாகி வருகிறதாம்.

மஞ்சு வாரியருக்கு இப்படி ஒரு ரோலா

மஞ்சு வாரியருக்கு இப்படி ஒரு ரோலா

புனேயில் அஜித் நடிக்க வேண்டிய ஒரு சில காட்சிகள் மட்டும் தான் மீதம் உள்ளதாம். அதை முடித்து விட்டு டப்பிங் உள்ளிட்ட வேலைகளை அஜித் துவக்க போகிறாராம். புனேயில் நடக்க உள்ள ஷுட்டிங்கில் மஞ்சு வாரியரும் கலந்து கொள்ள போகிறாராம். படத்தில் அஜித்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதோ, அதே அளவு முக்கியத்துவம் மஞ்சு வாரியம் நடிக்கும் ரோலுக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் அஜித் - மஞ்சு வாரியரின் இந்த புதிய காம்போ ரசிகர்களை நிச்சயம் கவரும் என கூறப்படுகிறதாம்.

ஹீரோ, வில்லன் ரெண்டுமே அஜித் தான்

ஹீரோ, வில்லன் ரெண்டுமே அஜித் தான்

படத்தில் ஹீரோ, வில்லன் இரண்டுமே அஜித் தான் என கூறப்படுகிறது. வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட கதை. வங்கிக் கொள்ளையுடன் வயதான காலேஜ் ப்ரொஃபசர் ரோலில் நடிக்கும் அஜித்தின் கேரக்டர் எப்படி கனெக்ட் ஆகிறது என்பது தான் படத்தின் கதை என சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் கதை என்னவென்றே கொஞ்சம் கூட யூகிக்க முடியாமல், படத்தின் மீதான ஆர்வம் அனைவருக்கும் அதிகரித்துள்ளது.

அஜித்தின் ஆட்டோகிராஃபுடன் வாழ்த்து கார்டு

அஜித்தின் ஆட்டோகிராஃபுடன் வாழ்த்து கார்டு

இந்த சமயத்தில் பைக் டூருக்கு இடையே ரசிகர்களுக்கு கொடுப்பதற்காக தனது கைப்பட வாழ்த்து எழுதி, தனது கையெழுத்து போட்ட அட்டைகளை அஜித் தயார் செய்வது போன்ற போட்டோ ஒன்று வெளியாகி செம வைரலாகி வருகிறது. அந்த அட்டையில், டியரஸ்ட் என குறிப்பிட்டு ஒவ்வொரு ரசிகரின் பெயரையும் தனித்தனியாக குறிப்பிட்டு, Wishing you a beautiful life. Your Ajithkumar என எழுதி கையெழுதிட்டுள்ளார் அஜித்.

எங்களுக்கும் ஒரு கார்டு கிடைக்குமார் சார்

எங்களுக்கும் ஒரு கார்டு கிடைக்குமார் சார்

பைக் டூருக்கு இடையே ரசிகர்களுக்கு கொடுப்பதற்காக தனது கைப்பட வாழ்த்து எழுதி, தனது கையெழுத்து போட்ட அட்டைகளை அஜித் தயார் செய்வது போன்ற போட்டோ ஒன்று வெளியாகி செம வைரலாகி வருகிறது. அந்த அட்டையில், டியரஸ்ட் என குறிப்பிட்டு ஒவ்வொரு ரசிகரின் பெயரையும் தனித்தனியாக குறிப்பிட்டு, Wishing you a beautiful life. Your Ajithkumar என எழுதி கையெழுதிட்டுள்ளார் அஜித்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X