மீண்டும் கறுப்புக்கு மாறிய 'தல'!
நரைத்த தலை, மழுமழுவென ஷேவ் செய்த முகத்துடன் வலம் வந்த அஜீத்தை ஒரு வழியாக கெட்டப் மாற்றம் செய்துவிட்டார் கவுதம் மேனன்.
இப்போது உருவாகிவரும் புதிய படத்தில் அவரது தோற்றம் இளமைப் பொலிவுடன் கம்பீரமாக உள்ளது.
அஜீத்துக்கு இளமையிலேயே நரை விழுந்துவிட்டது. தலைக்கு டை அடிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத அஜீத், வேண்டா வெறுப்பாகத்தான் டை அடித்து நடித்தார்.

மங்காத்தாவில்
ஆனால் மங்காத்தா படத்தில் 40 வயது போலீஸ்காரர் வேடம். தலையில் கொஞ்சம் நரை இருப்பது போல வந்தால், யதார்த்தமாக இருக்கும் என்று வெங்கட் பிரபு நினைத்தார். அதுமட்டுமல்ல, டை அடிக்கப் பிடிக்காத அஜீத்தின் மனசைப் புரிந்து, அப்படியே வாங்க தல என்று கூறிவிட, இரட்டை சந்தோஷத்துடன் நடித்தார் அஜீத்.

தொடர்ந்தது பாணி
அஜீத்தின் தோற்றமும் அந்தப் படமும் பெரிய ஹிட்டாகிவிட, அதே பாணியை அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தார். அதுவும் வீரம் படத்தில் நரைத்த முடி, தாடி, மீசையோடே வந்தார். (அவர் முடி ஏன் வெளுத்துவிட்டது என்பதற்கு ஒரு காரணம் சொல்வார்கள் பாருங்கள் அந்தப் படத்தில்... செம காமெடி!)

காஸ்ட்லி டை
கவுதம் மேனன் தன் படத்தை ஆரம்பிக்கும்போதே, முடியை கருகருவென வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வித்தியாசமாக இருக்கும் என அஜீத்திடம் சொன்னார். உடனே உலகின் அத்தனை காஸ்ட்லி மற்றும் சேஃப் டைகளையும் வரவழைத்து சோதித்துப் பார்த்து, ஒன்றைத் தேர்வு செய்தனர்.

பதினைந்து வயது குறைந்தவராக...
இப்போது வெளியாகியுள்ள தல 55 ஸ்டில்களில் கருகரு முடி, கச்சிதமான மீசையுடன் பதினைந்து வயது குறைந்தவராகக் காட்சி தருகிறார் அஜீத். இந்தப் படங்களை அஜீத்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











