அஜித் படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கலனு யார் சொன்னது?.. பெரிய நிறுவனம் 2 படங்கள் செய்யப்போகுதாம்

சென்னை: அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியான குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை. அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படத்துக்கு அஜித் கேட்கும் சம்பளத்தை தர எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை என தகவல்கள் வந்தன. இந்நிலையில் கோலிவுட் வட்டாரத்தில் புதிய தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

அஜித்குமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக கடந்த வருடத்தில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்தார். முதலில் வெளியான விடாமுயற்சி படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்தார். ஏற்கனவே மார்க் ஆண்டனி படத்தை இயக்கி ஆதிக் நூறு கோடி ரூபாய் வசூலித்த இயக்குநர் என்ற பெயரை பெற்றிருந்தார். எனவே இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.

Ajith s Next With Adhik Ravichandran Likely to Be Backed by Sun Pictures
Photo Credit:

இதுவும் திருப்திப்படுத்தவில்லை: விடாமுயற்சி படம் விட்டதை கண்டிப்பாக குட் பேட் அக்லி பிடித்துவிடும் என்றுதான் ஏகே ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களில் பலரையுமே அந்தப் படம் திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. படம் முழுக்க அஜித் பற்றிய ஆஹோ,ஓஹோ புகழ்ச்சியும், ரீல்ஸ்களின் அடுக்குகளாகவும் படம் அமைந்துவிட்டதாக நொந்துகொண்டார்கள். அதேசமயம் படம் நூறு கோடி ரூபாயை அள்ளிவிட்டதாக படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்தது.

Also Read
ரம்பா வீட்டில் சோகம்.. வெறுமையில் தவிக்கிறாராம்.. அப்பாவை நினைத்து ஃபீலிங்.. அவங்களே சொல்லியிருப்பதை பாருங்க
ரம்பா வீட்டில் சோகம்.. வெறுமையில் தவிக்கிறாராம்.. அப்பாவை நினைத்து ஃபீலிங்.. அவங்களே சொல்லியிருப்பதை பாருங்க

அடுத்த படம்: இரண்டு படங்களையும் அடுத்தடுத்து முடித்துவிட்டு தனது கவனம் முழுவதையும் கார் ரேஸில் திருப்பினார் ஏகே. அதன் பலனாக உலகத்தின் பல நாடுகளுக்கு சென்று தனது டீமுடன் களமிறங்கி வெற்றிகளையும் பெற்றார். விட்டால் சினிமாவுக்கு ஒரேயடியாக முழுக்கு போட்டுவிட்டு; கார் ரேஸ், பைக் ரைடில் மட்டும்தான் அவர் கவனம் செலுத்துவாரோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழும் அளவுக்கு சென்றது. அவர்கள் பயந்ததுபோல் நடக்காமல்; இன்னொரு படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

ஆதிக் ரவிச்சந்திரனுடன்: குட் பேட் அக்லியில் பணியாற்றியபோது அஜித்தின் குட் புக்கில் ஆதிக் இடம்பெற்றார். அதன் காரணமாக மீண்டும் அவருடன் சேர்ந்து ஒரு படத்தில் பணியாற்ற கமிட்டாகிவிட்டார். இதில் ஹீரோயினாக ஸ்ரீலீலா நடிக்கிறார் என தெரிகிறது. அதேசமயம் இப்படத்துக்காக அஜித் கேட்ட சம்பளத்தை கொடுக்க யாரும் முன்வரவில்லை; எனவே தயாரிப்பாளர் கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார் ஏகே என்றெல்லாம் தகவல்கள் கிளப்பிவிடப்பட்டன. அஜித்துக்கே இந்த நிலைமையா எனவும் ரசிகர்கள் நொந்துகொண்டார்கள்.

யார் தயாரிப்பாளர்?: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வந்திருக்கிறது. அதன்படி அஜித் - ஆதிக் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும்; இந்தப் படம் மட்டுமின்றி அஜித் நடிக்கும் இன்னொரு படத்தையும் அந்த நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில்தான் சன் பிக்சர்ஸை சந்தித்து ஆதிக் கதை சொல்லி; அட்வான்ஸையும் வாங்கிவிட்டார்; விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் திரைத்துறை பட்சிகள் சொல்கின்றன. அநேகமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இன்னொரு படத்தை சிறுத்தை சிவாவோ அல்லது வெங்கட் பிரபுவோ இயக்கலாம் என்றும்; வெங்கட் இயக்கினால் அது மங்காத்தா 2வாக இருக்கக்கூட வாய்ப்புகள் உண்டு எனவும் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X