அஜீத்தின் 'வீரம்' பஞ்ச் டயலாக் என்ன தெரியுமா?

சென்னை: தனது படங்களில் பஞ்ச் டயலாக்கே பேசுவதில்லை என்ற கொள்கையை அஜீத் கடைபிடித்து வந்தாலும், அவரது படங்களில் அவர் சாதாரணமாக பேசும் வசனங்களை மீடியாவும், ரசிகர்களும் தொடர்ந்து பேசி பஞ்ச் வசனமாக்கி விடுகிறார்கள்.

அந்தவகையில் வீரம் படத்தில் பஞ்ச் வசனமே இல்லையென சொல்லப் பட்டாலும், அஜீத்தின் ரசிகர்கள் வீரம் படத்தின் இரண்டாவது டீஸரில் இருந்து புதிய பஞ்ச் டயலாக்கைப் பிடித்து விட்டார்கள்.

வீரம்....

வீரம்....

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜீத் நடித்து பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் படம் ‘வீரம்', படத்தின் நாயகி தமன்னா.

இரண்டாவது டீஸர்....

இரண்டாவது டீஸர்....

தற்போது வீரம் படத்தின் இரண்டாவது டீஸரை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், நல்லவன்னு சொல்வாங்க நம்பாதீங்க... கெட்டவன்னு சொன்னாலும் திட்டாதீங்க... என்ற பாடல் வரிகளின் பின்னணியில் அஜீத்தின் பல காட்சிகளை தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

பஞ்ச் டயலாக்....

பஞ்ச் டயலாக்....

அந்த டீஸரின் இறுதியில், என்ன நான் சொல்றது? என்ற அஜீத் கேள்வி கேட்பது போன்ற காட்சி அமைக்கப் பட்டிருக்கிறது. இதன்மூலம், ‘என்ன நான் சொல்றது?' என்ற வசனத்தை படத்தில் அடிக்கடி பயன்படுத்துகிறாராம் அஜீத்.

தகவல்....

தகவல்....

முக்கியமான விஷயங்களை அஜீத் பேசி முடித்ததும் இந்த வசனத்தை சொல்வதாக வைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மோகன்லால் ஸ்டைல்...

மோகன்லால் ஸ்டைல்...

ஒவ்வொரு டயலாக்கிற்கும் பிறகு இப்படி பஞ்ச் சொல்வது மோகன்லால் ஸ்டைல். எல்லோரும் இவடத்தன்ன காணுமல்லோ (எல்லோரும் இங்கேதானே இருப்பீங்க இல்லையா), காரணம் நீ குட்டியாணு (காரணம் நீ சின்ன குழந்தை) என்பது போன்ற வசனங்களை அவர் தனது படங்களில் பயன்படுத்தி, சாதாரண வசனங்களான இவற்றை பன்ச் வசனங்களாக மாற்றியது உண்டு.

என்ன நான் சொல்றது...

என்ன நான் சொல்றது...

அந்தவகையில், வீரம் படத்தில் அஜீத் அடிக்கடி சொல்லும் ‘என்ன நான் சொல்றது' என்ற வசனத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X