என் பிறந்தநாளில் கட்அவுட், போஸ்டர் என பணத்தை வீணாக்காதீங்க: ரசிகர்களுக்கு 'தல' கோரிக்கை

By Siva

சென்னை: தனது பிறந்த நாளுக்கு கட்அவுட்கள், போஸ்டர்கள் வைத்து பணத்தை வீணாக்காமல் மாறாக ஏழைகளுக்கு உதவி செய்யுமாறு அஜீத் குமார் தன்னுடைய ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

அஜீத் குமார் வரும் மே மாதம் 1ம் தேதி தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகர்களின் பிறந்தநாள் என்றால் அவர்களின் ரசிகர்கள் கட்அவுட், பேனர் வைத்து ஒரு கலக்கு கலக்கிவிடுவார்கள். இது அஜீத் ரசிகர்களுக்கும் பொருந்தும்.

தனது 42வது பிறந்த நாள் வருவதையொட்டி அஜீத் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பணத்தை வீணாக்காதீங்க

பணத்தை வீணாக்காதீங்க

தனது பிறந்த நாளையொட்டி பேனர்கள், போஸ்டர்கள், கட்அவுட்டுகள் வைத்து பணத்தை வீணாக்க வேண்டாம் என்று அஜீத் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏழைகளுக்கு உதவுங்கள்

ஏழைகளுக்கு உதவுங்கள்

பிறந்த நாள் விளம்பரத்திற்கு செலவு செய்யும் பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து உதவுங்கள் என்று 'தல' வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனக்கு பிடித்த நகரம் சென்னை

எனக்கு பிடித்த நகரம் சென்னை

அஜீத் தான் 2 வயது குழந்தையாக இருக்கையில் சென்னையில் வந்து குடும்பத்துடன் செட்டிலானதாகவும், அதில் இருந்து இன்று வரை இங்கு தான் இருப்பதாகவும் தெரிவித்தார். வேறு நகரத்தில் செட்டிலாவது குறித்து தன்னாலும், தனது மனைவியாலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X