ஃபுல் ரேஸ் சூட்டில் பிஎம்டபிள்யூ பைக்கில் சென்னையிலிருந்து பெங்களூர் சென்ற அஜீத்!

By Shankar

சென்னை: முழு ரேஸ் உடையில் தனது புத்தம் புதிய பிஎம்டபிள்யூ 1000 பைக்கில் நேற்று சென்னையிலிருந்து ஜாலியாக பெங்களூர் கிளம்பிப் போனார் நடிகர் அஜீத் குமார்.

தான் விரும்பியதைச் செய்ய சினிமா இமேஜ், ரசிகர்கள் வளையம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர் அஜீத்.

விரும்பிய வாழ்க்கை...

விரும்பிய வாழ்க்கை...

விரும்பினால் வெளிநாட்டில் ரேசுக்குப் போவார், அல்லது உள்ளூரில் ரேஸ் போவார், க்யூவில் நின்று வாக்களிப்பார், அச்சரப்பாக்கம் பக்கம் போய் குட்டி விமானங்கள் அல்லது ஹெலிகாப்டர்களைப் பறக்க விட்டுக் கொண்டிருப்பார்.

'நடிப்பு என் தொழில், தனிப்பட்ட விஷயங்கள் எதுவும் அந்தத் தொழிலால் பாதிக்கக் கூடாது' -இது அஜீத் அடிக்கடி சொல்லும் விஷயம்.

புதிய பிஎம்டபிள்யூ 1000 ஆர்ஆர்

புதிய பிஎம்டபிள்யூ 1000 ஆர்ஆர்

சமீபத்தில்தான் புதிதாக பிஎம்டபிள்யூ1000 ஆர்ஆர் என்ற புதிய பைக்கை ஏக விலை கொடுத்து வாங்கினார் அஜீத். தனது சொந்த உபயோகத்துக்கு அவர் வாங்கிய இந்த பைக்கை விஷ்ணுவர்தன் இயக்கும் ஆரம்பம் படத்திலும் பயன்படுத்தியுள்ளார்.

சென்னையில் ஒரு நாள்...

சென்னையில் ஒரு நாள்...

இந்த பைக்கில் நேற்று சென்னையை ஒரு வலம் வந்தார் அஜீத். பின்னர் முழு ரேஸ் சூட்டில் அந்த பைக்கிலேயே பெங்களூர் சென்றார். ஆத்தூர், சேலம் வழியாக அவர் பெங்களூர் சென்றார். அவருடன் அவரது நண்பர்கள் இருவரும் சென்றனர்.

வழியில்...

வழியில்...

ரேஸ் சூட்டில் இருந்ததற்காக எங்கும் இறங்காமல் செல்லவில்லை அவர். வழியில் கும்பகோணம் டிகிரி காபி என்ற கடையில் நிறுத்தி காபி குடித்தார். அவரை திடீரென்று பார்த்ததில் இளைஞர்களும் பொதுமக்களும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகினர். தன்னைத் தேடி வந்து பேசிய அத்தனை பேரிடமும் ஜாலியாகப் பேசி விடைப் பெற்றுச் சென்றார் அஜீத். பெங்களூரில் ஓய்வெடுப்பதற்காக சென்றுள்ளார் அஜீத்.

ஆரம்பத்துக்கு அட்டகாசமான டீசர் மாதிரி அமைந்தது அஜீத்தின் இந்த அதிரடி பைக் ட்ரிப்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X