இந்த சீனிலையா தல அஜித் நடித்தார் ?...நெஞ்சை பதற வைக்கும் வலிமை ஒர்க்கிங் ஸ்டில்ஸ்

சென்னை : இந்த ஆண்டில் இந்திய சினிமாவிலேயே அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வருகிறது அஜித் நடித்துள்ள வலிமை. ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்தள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன்சஙர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

இந்த படத்தில் அஜித், ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வலிமை படம் பைக் ரேசை மையமாகக் கொண்ட படம் என்பது இதுவரை வெளியான ஸ்டில்களில் இருந்து தெளிவாக தெரிகிறது. இந்த படத்தில் அஜித் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார்.

எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு

ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டது முதல் சமீபத்தில் வெளியிடப்பட்ட க்ளிம்ப்ஸ் வரை வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு எகிற வைத்துள்ளன. படம் எப்போது ரிலீசாகும் என அனைவரும் கேட்டு வருகிறார்கள். அஜித்தின் இளமை தோற்றம், துடிப்பான போலீஸ் ஆக்ஷன் காட்சிகளை பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

அந்தரத்தில் பறந்த அஜித்

அந்தரத்தில் பறந்த அஜித்

அதிலும் வலிமை ஃபஸ்ட் கிளான்ஸ் டீசரில் அந்தரத்தில் பைக்கில் பறக்கும் அஜித்தின் ஆக்ஷன் காட்சிகளை தியேட்டரில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்த த்ரில்லிங்கான காட்சிகள் அனைவரையும் கவர்ந்துள்ளன.

வைரலாகும் ஒர்க்கிங் ஸ்டில்ஸ்

வைரலாகும் ஒர்க்கிங் ஸ்டில்ஸ்

சமீபத்தில் வெளியான எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்கள், படத்தை எப்போது தியேட்டரில் பார்க்கலாம் என்ற ஆர்வத்தை அனைவரிடமும் ஏற்படுத்தி விட்டது. இந்நிலையில் வலிமை படத்தின் ஒர்க்கிங் ஸ்டில்கள் வெளியாகி உள்ளன. நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சிகள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

Recommended Video

Thala Ajith & Dhanush-க்கு இவ்ளோ பெரிய பசங்களா | Anoushka Ajith, Yatra dhanush
இந்த சீனிலையா அஜித் நடித்தார்

இந்த சீனிலையா அஜித் நடித்தார்

முதல் ஃபோட்டோவில் வரிசையாக 8 பைக்குகள் அந்தரத்தில் தலைகீழாக பறந்தபடி உள்ளன. இரண்டாவது ஃபோட்டோவில் அந்தரத்தில் பறக்கும் பைக்குகளுக்கு இடையே ஹெலிகாப்டர் ஒன்று பறக்கும் காட்சி அமைந்துள்ளது. அதற்கு அடுத்த ஃபோட்டோக்களில் அந்தரத்தில் பறக்கும் பைக்குகள் தூரத்தில் நின்று ஆச்சரியத்துடன் பார்த்து, படம் பிடிக்கும் படக்குழுவினர் உள்ளனர்.

அப்டேட் கேட்டது தவறேயில்லை

அப்டேட் கேட்டது தவறேயில்லை

அந்தரத்தில் பறக்கும் இந்த பைக் ரேஸ் காட்சிகள் பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளன. படம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனாலும் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏன் குறையாமல் உள்ளது என்பது இப்போது தான் தெரிகிறது. இப்படிப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் அடங்கிய படத்தை பார்ப்பதற்காக அஜித் ரசிகர்கள் விடாமல் அப்டேட் கேட்டு, காத்திருப்பதில் தவறே இல்லை என்றே பலரும் சொல்ல துவங்கி விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X