வாட்ஸ்ஆப்பில் வைரலாகும் 'விஸ்வாசம்' புகைபடங்கள்!
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் புகைப்படங்கள் லீக்கானது.
Recommended Video

சென்னை: அஜித் நடித்து வரும் விஸ்வாசம் திரைப்படத்தின் புகைப்படங்கள் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி பருகிறது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில், சிவா இயக்கித்தில் அஜித் நடித்து வரும் படம் 'விஸ்வாசம்'. நயன்தாரா ஹீரோயினாக நடித்துவரும் இந்தப் படத்தில், விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாதில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் போட்டோக்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வீரம் படம் போல் வெள்ளை வேட்டி, சட்டையில் காட்சியளிக்கும் அஜித்துக்கு, சண்டை பயிற்சி அளிக்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர். அவருடன் தெலுங்கு நடிகர் ரவி அவானா இருக்கிறார். எனவே வில்லனாக நடிக்கும் ரவி அவானாவை புரட்டி எடுக்க தல தயாராகிக் கொண்டிருப்பது இந்த புகைப்படங்களின் மூலம் தெரியவருகிறது.

நானி நடிப்பில் வெளியான 'கிருஷ்ணார்ஜுன யுத்தம்' படத்தில் வில்லனாக நடித்தவர் இந்த ரவி அவானா. விஸவாசம் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் அவர்.

விஸ்வாசம் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி இப்படம் ரிலீஸாக இருக்கிறது. தற்போது லீக்காகி இருக்கும் இப்படங்கள் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











