அஜித் எப்பவுமே விஜய் பக்கம்தான்.. அரசியல் சூழ்ச்சி இங்க நடக்காது.. ஒன்றான விஜய் - அஜித் ரசிகர்கள்!
சென்னை: கரூர் துயர சம்பவத்தில் அத்தனை பேரும் விஜய்யை கார்னர் செய்துகொண்டிருந்த சூழலில்; ஆங்கில் தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த அஜித், 'இந்த துயர சம்பவத்துக்கு தனிப்பட்ட நபர் மட்டும் பொறுப்பில்லை. நான் உட்பட அனைவருமே பொறுப்புதான்' என்று தெரிவித்திருந்தார். அந்தப் பேட்டி ட்ரெண்டான சூழலில்; விஜய்யை விமர்சித்துவிட்டார் அஜித் என்றும் பலரால் சொல்லப்பட்டது. இந்நிலையில் விஜய்க்கு எதிரானவன் நான் கிடையாது என அஜித் சொன்னது அதைவிட பெரிய பேசுபொருளாகியிருக்கிறது.
கரூருக்கு விஜய் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தார்கள். அந்த உயிரிழப்புக்கு விஜய்தான் முழு பொறுப்பும் என்று கிட்டத்தட்ட அனைவருமே சொல்லிவிட்டார்கள். ஆனால் அவருக்கு போட்டியாளராக கருதப்படும் அஜித்தோ, விஜய் மட்டும் காரணமில்லை. அனைவருமே காரணம்தான் என சொல்லியிருந்தார். அவரது இந்தப் பேட்டி பலரால் பலவிதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
அஜித்தின் விளக்கம்: தான் கொடுத்த பேட்டி எங்கெங்கோ எப்படி எப்படியோ பயன்படுத்தப்படுவதை அஜித் நேற்று ஒரு விளக்கம் அளித்திருந்தார். அந்த விளக்கத்தில், "இளைஞர்களுக்கு நல்ல செய்தியை கொண்டு செல்வதற்கு பதிலாக ஒருசிலரால் அவர்களுடைய அஜெண்டாவுக்கு ஏற்ப எனது பேட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு எதை எடுத்தாலும் பரபரப்பாக்கத்தான் முயல்வார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் நான் எனக்கு பிடித்த பாதையில் நேர்மறையான எண்ணங்களுடன் செல்ல விரும்புகிறேன்.

ரசிகர்களுக்கிடையேயான போர்?: ஒரு காலத்தில் சினிமா, விளையாட்டு, அரசியல் என தனித்தனி பத்திரிகையாளர்கள் இருந்தார்கள். இன்றோ அரசியல் பத்திரிகையாளர்களைவிடவும் ஒருசில சினிமா பத்திரிகையாளர்களே மிகவும் அரசியல்மயமாகிவிட்டார்கள். என்னுடைய நல்ல எண்ணங்கள் சில ஊடகங்களால் சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை. மாறாக அவர்கள் இதை அஜித்துக்கும், விஜய்க்கும் இடையேயான மோதல், அவர்கள் ரசிகர்களுக்கிடையேயான போர் என்பது போல் மாற்றிவிட்டார்கள்.
விஜய்க்கு எதிரானவன் இல்லை: நான் எப்போதும் விஜய்க்கு எதிரானவன் இல்லை. அவருக்கு நல்லதே நினைத்திருக்கிறேன். நாம் இதை ஒரு நச்சு கலந்த சம்பவமாக மாற்றிவிட்டோம். என்னுடைய அந்த ஆங்கில் ஊடக பேட்டி இன்னும் பத்து, இருபது வருடங்களில் பெரிய பேசுபொருளாக இருக்கும் என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் முதலில் பாருங்கள். பார்ப்பதற்கு தகுதியானது என நினைத்தால் என்னுடைய படங்களை பாருங்கள். படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று மக்களை இன்ஃபுளூயன்ஸ் செய்யமாட்டேன். ஓட்டும் கேட்டு வரமாட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒன்றான ரசிகர்கள்: அஜித்தின் இந்த விளக்கம் இவ்விவாகரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏகேவின் இந்த ஸ்டாண்டை பார்த்த விஜய் ரசிகர்கள், 'ஏகே பின்னியெடுத்துவிட்டார். அவரது பேட்டியை வைத்து அரசியல் நினைத்தவர்களை எல்லாம் வாய் மூட வைத்துவிட்டார். அஜித் - விஜய் நட்பு இப்படி பொதுவெளியில் தெரிந்திருப்பதன் மூலம் இனி யாராலும் எங்களுக்குள் மூட்டிவிட முடியாது' என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துவருகிறார்கள். அதுமட்டுமின்றி இனி அஜித்துக்கு ஒன்று என்றால் தளபதி ரசிகர்கள் துணை நிற்போம்; எங்களுக்கு ஒன்று என்றால் ஏகே ரசிகர்கள் நிற்பார்கள் என்பதை அரசியல் செய்ய நினைப்பவர்கள் பார்த்து மிரண்டு போயிருப்பார்கள் என்று அதிரடியாகவும் பதிவிட்டுவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











