Ajith: 8 மாதத்தில் 42 கிலோ குறைத்தது எப்படி? அஜித்தின் மனம் திறந்த பேட்டி!

சென்னை: நடிகர் அஜித் குமார் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் வெளியானது. அந்த படத்தில் பல கெட்டப்பில் வந்த அஜித், உடல் எடையை பயங்கரமாக குறைத்து ஸ்லிம் லுக்கில் இருந்தார். எடையை எப்படி குறைத்தேன் என்பதை அண்மையில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் குட் பேட் அக்லி தியேட்டரில் வெளியானது. அதில், அஜித் இன்டர் நேஷனல் கேங்ஸ்டராக நடித்திருந்தார். குடும்பத்தின் மீது அதிக பாசம்கொண்ட அஜித், தனது மனைவி த்ரிஷாவிற்காகவும், தனது மகனுக்காகவும் நல்லவனாக மாறி, சிறையில் இருந்து வெளியே வருகிறார். அஜித் வெளியில் வந்ததும், மகனை ஜெயிலுக்கு அனுப்பி பிரச்சனை கொடுக்கும், வில்லனுக்கு மீண்டும் கேங்ஸ்டராக மாறி சரியான படத்தை கற்றுக்கொடுக்கிறார்.

குட் பேட் அக்லி: தியேட்டரில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த படத்தில் பில்லா, மங்காத்தா, தீனா போன்ற கெட்டப்பில் வந்து இருந்தார். குறிப்பாக இவர் டீன் ஏஜ் கேங்ஸ்டராக வந்து இருப்பார். அதில் மொத்த எடையையும் குறைத்து ஸ்லிம் லுக்கில் இருப்பார். இதைப்பார்த்த ரசிகர்கள் வாயடைந்து போனார்கள் அந்த அளவிற்கு மொத்தமாக மாறி இருந்தார் அஜித். தற்போது, அஜித் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், உடல் எடையை குறைத்தது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில், நான் மீண்டும் கார் ரேஸில் ஈடுபட முடிவு செய்த நாளிலேயே, அதற்காக உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 2024 ஆகஸ்ட் முதல் மார்ச் வரை கடந்த 8 மாதங்களில் நான் 42 கிலோ எடையைக் குறைத்துள்ளேன். இதற்காக டயட், உடற்பயிற்சி, நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளை செய்தேன். இதனால், நான் ஒரு டீடோட்டலராகவும் சைவ உணவு பிரியராகவும் மாறிவிட்டேன். பந்தயத்தின் போது சகிப்புத்தன்மை மிகவும் தேவைப்படும் எனவே, உடற்தகுதியுடன் இருக்க தேவையான அனைத்தையும் நான் செய்தேன். இப்போது, என் மனம் முழுக்க பந்தயத்தில் உள்ளது.

Ajith good bad ugly

அடுத்த படம்: கார் ரேஸிங் காலத்தில் படத்தில் நடிக்காமல் பந்தயத்தில் கவனம் செலுத்துவதே சிறந்ததாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு, நவம்பர் மாதம் 2025ல் தொடங்கி 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸாக வாய்ப்புள்ளது என்றார். இதுவரை தன்னுடைய பட அப்டேட்டை அஜித் கொடுத்ததே இல்லை. ஆனால் அந்த பேட்டியில் அடுத்த படம் குறித்த அப்டேட்டை அஜித் கூறினார். குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித், தனுஷின் வாத்தி, துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X