GOAT ட்ரெய்லர்.. அஜித் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?.. விஜய் ஹேப்பி அண்ணாச்சி
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் கோட் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. மிகப்பெரிய வரவேற்பை ட்ரெய்லர் பெற்றிருக்கிறது. அதனை விஜய் ரசிகர்கள் அதிகம் கொண்டாடிவருகிறார்கள். இந்தச் சூழலில் கோட் படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு அஜித் பேசியது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.
விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய மூன்று படங்களுமே சரியாக போகவில்லை. வசூல் ரீதியாக அவை சக்கைப்போடு போட்டதாக சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் சொன்னாலும் விமர்சன ரீதியாக ட்ரோல்களை சந்தித்தன. அநேகமாக கடந்த பல வருடங்களில் விஜய்யின் படங்களில் வரிசையாக இப்படி ட்ரோலை சந்தித்தது இந்த மூன்று படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகியிருக்கின்றனர்.

வெங்கட் பிரபுவுடன் கூட்டணி: இப்படி அவர்கள் அப்செட்டில் இருக்கும்போது ஸ்வீட் சர்ப்ரைஸாக வெளியானது வெங்கட் பிரபு - விஜய் கூட்டணி சேர்கிறது என்று. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் GOAT படம் விஜய்க்கும் சரி, வெங்கட் பிரபுவுக்கும் சரி முக்கியமான படம்தான். ஏனென்றால் வெங்கட் பிரபு இதற்கு முன்பு இயக்கிய கஸ்டடி படம் மோசமான தோல்வியை தழுவியது. எனவே இந்தப் படத்தில் தானும் கம்பேக் கொடுத்து விஜய்க்கும் தரமான படம் கொடுக்க வேண்டுமென்பதில் வெங்கட் பிரபு தெளிவாக இருக்கிறார்.
டீ ஏஜிங்: இந்தப் படத்தில் வெங்கட் பிரபு டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை கையில் எடுத்திருக்கிறார். விஜய்யின் வயதை குறைத்து காண்பிப்பதற்காக அமெரிக்காவரை சென்று வேலை செய்துவந்தார்கள் விஜய்யும், வெங்கட் பிரபுவும். விஜய் ஏற்கனவே இளமையாக இருப்பவர். எனவே அவரை டீ ஏஜிங்கில் பார்ப்பதற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இருந்தார்கள்.மேலும் இந்தப் படமானது டைம் ட்ராவல் ஜானரில் உருவாகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ட்ரெய்லர் ரிலீஸ்: படத்திலிருந்து வெளியான மூன்று சிங்கள்களுமே சுமாரான வரவேற்பை பெற்றன. இதனால் விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட சோகமடைந்தனர். சூழல் இப்படி இருக்க படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள், வெங்கட் பிரபு கலக்கிட்டார். அவரை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம் என்று கூறி தங்களது பெரிய ரெஸ்பான்ஸை கொடுத்தனர் .
அஜித் சொன்ன வார்த்தை: இந்நிலையில் கோட் படத்தின் ட்ரெய்லரை அஜித் பார்த்திருக்கிறார். இதுகுறித்து வெங்கட் பிரபு பேசுகையில், "கோட் படத்தின் ட்ரெய்லரை அஜித் பார்த்தார். அதனைப் பார்த்துவிட்டு சூப்பரா இருக்குடா, விஜய்க்கும் படக்குழுவுக்கும் வாழ்த்துகள் டா' என்று கூறியதாக தெரிவித்தார். வெங்கட் பிரபு இவ்வாறு பேசியிருப்பதை விஜய் ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











