அஜித்திற்கு கேரளாவில் சிகிச்சையா?... ஏன் என்ன ஆச்சு… வைரலாகும் கடிதம் !
சென்னை : கேரளாவில் தனக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் அஜித் கடிதம் எழுதி உள்ளார்.
எச்.வினோத் அஜித் கூட்டணியில் தயாரான வலிமை படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. அதிரடி ஆக்ஷன் கதையம்சத்துடன் வெளியான இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் பெற்றது.
வலிமைத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி ரூ,200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

அஜித் 61
அஜித் நடிக்கும் ஏ.கே.61 படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித், ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படம் மணி ஹெய்ஸ்ட் வெப் தொடர் பாணியில் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆக்ஷன் காட்சிகள் இல்லை
இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஆக்ஷன் காட்சிகளே இருக்காது என கூறப்படுகிறது. ஆக்ஷனுக்கு பெயர்போன அஜித்துக்கு ஆக்ஷன் காட்சிகளே இல்லை என்றால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேரளாவில் சாமி தரிசணம்
அஜித் தனது 61வது படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பு கேரளாவில் பாலக்காடு பகுதியில் அமைந்துள்ள கல்பாத்தி விஸ்வநாதர் கோயிலுக்கு நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்று சாமி தரிசணம் செய்தார். அப்போது வெள்ளை வேட்டி, வெள்ளை துண்டு அணிந்து மனமுருகி பிரார்த்தனை செய்தார். பிறகு கோயிலை விட்டு வெளியே வந்த அவர், அங்கிருந்த தனது ரசிகர், ரசிகைகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகின.

அஜித் கடிதம்
இதையடுத்து, கேரளாவில் இருக்கும் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அஜித் சிகிச்சை பெற்றதாக தகவல் வெளியானது எனிலும் அந்த தகவல் உறுதியாகவில்லை. இந்நிலையில் நடிகர் அஜித் தனக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை மருத்துவர்கள் உன்னி கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணதாஸ் இருவருக்கும் நன்றி கூறி, இந்த கடிதத்தை எழுதியுள்ளார் அஜித். மேலும், அவர்களுடைய, குரு க்ரிப்பா டீமுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











