Vidaamuyarchi - போடு செம.. விடாமுயற்சி ஷூட்டிங்கிற்கு யார் வந்திருக்காங்க பாருங்க.. செம ஹேப்பியில் படக்குழு

சென்னை: அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியானது. அதனையடுத்து அவரது 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பிறகு அவர் வெளியேறினார். விக்கி வெளியேறியதை அடுத்து மகிழ் திருமேனி அஜித்துடைய 62ஆவது படத்தை இயக்குகிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் வரிசையாக மூன்று படங்களில் நடித்தார். அதில் துணிவு படம் மட்டும்தான் தப்பித்தது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். அதனை லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அஜித்தின் வேகத்தை கண்டு அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

Ajith Son Advik Visit To Vidaamuyarchi Movie Shooting Spot

ஆனால் ஒரு ட்விஸ்ட்: பட அறிவிப்பு வேகமாக வெளியானாலும் அடுத்தடுத்த கட்டத்துக்கு படம் நகராமல் இருந்தது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி படத்துக்கு விடாமுயற்சி என்ற பெயர் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து ஒரு அப்டேட்டும் படக்குழு தரப்பிலிருந்து வரவே இல்லை. இதனால் அஜித் ரசிகர்கள் வலிமை இழந்து சோர்ந்து போயினர். ஒருகட்டத்தில் இந்தப் படம் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகமே ரசிகர்களிடம் வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடங்கிய ஷூட்டிங்: ஆனால் திரைக்கதை அமைப்பதில் கூடுதல் சிரத்தையை மகிழ் திருமேனி எடுத்துக்கொண்டதால்தான் விடாமுயற்சி ஷூட்டிங் லேட் ஆக காரணம் என சொல்லப்பட்டது. ஒருவழியாக அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. முதலில் நீரவ் ஷா படத்துக்கு கேமரா மேனாக இருந்தார். ஆனால் இப்போது ஓம் பிரகாஷ் கேமரா மேனாக பணியாற்றுகிறார். இவர் ஏற்கனவே அஜித் நடித்த ஆரம்பம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

மங்காத்தா கூட்டணி: குறிப்பாக இந்தப் படத்தில் அர்ஜுன், திரிஷா நடிக்கின்றனர். ஏற்கனவே அஜித் - அர்ஜுன் - திரிஷா நடிப்பில் வெளியான மங்காத்தா மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனால் இந்தப் படம் மீதும் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. இவர்கள் தவிர்த்து ஆர்வ, ரெஜினா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சமீபத்தில்கூட அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியிருந்தன.

விறுவிறு ஷூட்டிங்: தற்போது அஜர்பைஜானில் அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங் நடந்துவருகிறது.இதில் அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் என்றும். ஒரு வேலையாக இரண்டு பேரும் அஜர்பைஜான் செல்லும்போது திரிஷாவை வில்லன் க்ரூப் கடத்திவிடுகிறது. அவரை அஜித் எப்படி மீட்டார் என்பதுதான் படத்தின் ஸ்டோரி லைன் என்கிறார்கள். ஆனால் இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

பிரேக் எடுக்கும் அஜித்: சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி ஷூட்டிங்கிலிருந்து அஜித் ஒரு மாதம் பிரேக் எடுக்கப்போவதாக கூறப்படுகிறது. அதாவது இதுவரை அஜித் பங்கேற்ற இரண்டு ஷெட்யூல்களிலும் அவருக்கான காட்சிகள் முக்கால்வாசி முடிந்துவிட்டதாம். பிறர் சம்பந்தப்பட்ட காட்சிகளைத்தான் மகிழ் திருமேனி எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம். அதனால்தான் அவர் பிரேக் எடுப்பதாக தெரிகிறது.

ஸ்பாட்டில் ஆத்விக்: மேலும் அஜர்பைஜானிலிருந்து லண்டன் செல்லும் அஜித் அங்கு தனது குடும்பத்தாருடன் புத்தாண்டு மற்றும் தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை கொண்டாடவும் திட்டமிட்டிருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸாக விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அஜித்தின் மகன் ஆத்விக் சென்றிருக்கிறார். அங்கு அவர் அர்ஜுனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் ஆத்விக் படப்படிப்பு தளத்துக்கு வந்து படக்குழுவினருடன் ஜாலியாக பேசியதாகவும் படக்குழுவிலிருந்து தகவல்கள் கசிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X