தல 55... 3 வித கெட்டப்களில் தோன்றும் அஜீத்
சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் அஜித் மூன்று வித கெட்டப்களில் தோன்றுகிறாராம்.
அஜீத்தின் 55வது படமான இப்படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக தலைப்பு அறிவிக்கப்படவில்லை. எனவே, அப்படத்தை ரசிகர்கள் தல55 என்றே குறிப்பிட்டு வருகின்றனர்.
இப்படத்தில் அஜீத்தின் ஜோடியாக அனுஷ்கா மற்றும் திரிஷா என இரண்டு நாயகிகள். இது தவிர விவேக், அருண் விஜர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் கமல் சில வசனங்களுக்கு பின்னணி குரல் கொடுக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இப்படத்தில் அஜீத் மூன்று வித கெட்டப்புகளில் தோன்றுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

மனைவி, மகள்...
இப்படத்தில் அஜீத்தின் மனைவியாக திரிஷா வருகிறார். மலையாளப் படமான ‘ஐந்து சுந்தரிகள்' படத்தில் நடித்ததற்காக மாநில விருது பெற்ற அனிகா, அஜித்திற்கு மகளாக நடிக்கிறார்.

இளமையான அஜீத்...
விநாயகர் சதுர்த்தி போது இப்படத்தின் ஸ்டில்கள் வெளியானது. அதில் இளமையான தோற்றத்துடன் அஜீத் இருப்பது போன்று இருந்தது.

தாடியுடன் அஜீத்...
இந்நிலையில், சால்ட் பெப்பர் லுக்கில் சில புகைப்படங்களும், தாடியுடன் இருப்பது போன்ற புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அவை படப்பிடிப்பின் போது போது எடுக்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது.

இறுதிகட்டப் படப்பிடிப்பு...
இதன்மூலம் இப்படத்தில் 3 தோற்றங்களில் அஜீத் தோன்றுவது உறுதியாகியுள்ளது. தற்போது ஹைதராபத்தில் அஜித், அருண்விஜய், அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

பொங்கல் ரிலீஸ்...
மொத்தப்படத்தையும் முடித்த பின்னரே தலைப்பை வெளியிடலாம் எனப் படக்குழு தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.


Click it and Unblock the Notifications











