சிவா படத்தில் டை அடித்து வேட்டி, சட்டையில் வரும் அஜீத்
சென்னை: அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் கருப்பு முடியுடன் வருகிறாராம்.
நம் ஊர் ஹீரோக்கள் வயதானாலும் தலைக்கு டை அடித்து கருப்பு முடியுடன் நடித்து வருகிறார்கள். ரசிகர்களும் அதைத் தான் விரும்புகிறார்கள். ஆனால் ஹாலிவுட் ஹீரோக்கள் வெள்ளை முடியுடன் நடித்து பெயர் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் அஜீத் குமார் மங்காத்தா படத்தில் வெள்ளை முடியுடன் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

நரை முடி
மங்காத்தா படத்தில் அஜீத்தின் நரை முடி கெட்டப்பை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். அது பிரபலமானது.

விஷ்ணுவர்தன் படத்திலும் நரை
மங்காத்தாவை அடுத்து அஜீத் விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் நடித்துள்ளார். இதிலும் நரை முடியுடனேயே வருகிறார்.

சிவாவுக்காக கருப்பு முடி
அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று ராஜமுந்திரியில் உள்ள பிரபல தியேட்டரில் நடந்தது. அஜீத், தமன்னா, சந்தானம் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது அஜீத் முடிக்கு கருப்பு டை அடித்து வேட்டி சட்டை அணிந்து மாஸ் கெட்டப்பில் இருந்தார். தமன்னா சேலையில் இருந்தார்.


Click it and Unblock the Notifications











