எவ்வளவு நாளாச்சு இப்படி பார்த்து: அஜித்தால் கண் கலங்கிய ரசிகர்கள்

By Siva

Recommended Video

NKP Fight making Scene:Ajithதின் நல்ல மனசு யாருக்கு Sir வரும்

சென்னை: அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த தல ரசிகர்களுக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது.

ஹீரோக்கள் தலைமுடி நரைத்துவிட்டால் டை அடித்து யூத்தாக மாறி நடிக்கும் நேரத்தில் அஜித் வெள்ளை முடியுடன் நடித்து வருகிறார். அவர் தொடர்ந்து சால்ட் லுக்கிலேயே நடித்து வருகிறார்.

Ajith sports pepper look: Fans cant keep calm

அவரை பெப்பர் லுக்கில் பார்க்க அஜித் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தான் அந்த அதிசயம் நடந்துவிட்டது. அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கும் புதுப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்ததுடன் க்ளீன் ஷேவ் செய்து தலைமுடிக்கு டை அடித்துள்ளார்.

தல பழைய தலயாக மாறிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கிவிட்டது. ரொம்ப காலம் கழித்து அஜித்தை இப்படி பார்த்துள்ளனர். அஜித்தை இப்படி மாற வைத்த வினோத்துக்கு தல ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பூஜை வரும் 29ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தலயின் புதிய கெட்டப்பை பார்த்தால் அவர் கார் பந்தய வீரராக நடிப்பதாக வெளியான தகவல் உண்மை தான் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜித்துக்கு வேகம் என்றால் மிகவும் பிடிக்கும், புதுப்படத்தில் அந்த வேகம் இருக்கும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் வேறு ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இருக்கு தல 60 படத்தில் ரசிகர்களுக்கு செம என்டர்டெயின்மென்ட் இருக்கு.

நேர்கொண்ட பார்வை பிங்க் படத்தின் ரீமேக் தான் என்றாலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் வெளியான விஸ்வாசம்(#Viswasam) தான் 2019ம் ஆண்டின் முதல் பாதியில் ட்விட்டரில் அதிகம் டிரெண்டான ஹேஷ்டேக் ஆகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X