விஷ்ணுவர்தன் படத்தில் அஜீத்தின் பைக் சாகம்: அதுவும் டுக்காட்டியில்
சென்னை: விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்திற்காக அஜீத் குமார் டுகாட்டி ஓட்டிய செய்தி தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
அஜீத் குமார் விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹேக்கராக அஜீத் நடிக்கிறார். படத்திற்கு வலை என்று பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை எதுவும் வாய் திறக்கவில்லை. இந்நிலையில் இந்த படக்குழுவினர் துபாயில் உள்ளனர்.
அங்கு பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படத்தில் நயன், ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோர் உள்ளனர். அஜீத் ஒரு பைக் ரேசர் என்பது உங்களுக்கு தெரியும். அவர் பல பந்தயங்களில் கலந்து கொண்டு காயமடைந்து அறுவை சிகிச்சை செய்தவையும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விஷ்ணுவர்தன் படத்திலும் 'தல' பைக் ஓட்டுகிறாராம்.

துபாயில் டுக்காட்டியில் தல
படத்தில் அஜீத் குமார் சிவப்பு நிற 1200 சிசி டுகாட்டி டயாவெல் ஓட்டுகிறார். இந்த பைக்கை அனைவராலும் ஓட்டிவிட முடியாது.

பிரபலமாககிக் கொண்டிருக்கும் போட்டோ
அஜீத் 210 கிலோ எடை கொண்ட ரூ.26 லட்சம் மதிப்புள்ள டுக்காட்டியில் உட்கார்ந்து கேமராவைப் பார்க்கும் போட்டோ இன்டர்நெட்டில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

மங்காத்தாவைப் போன்று இதிலும்?
மங்காத்தா படத்தில் பணத்தை கடத்தும் காட்சியில் அஜீத் பைக்கில் வந்து சாகசம் செய்திருப்பார். அதே போன்று இந்த படத்திலும் ஒரு அதிரடி காட்சியை எதிர்பார்க்கலாம் போன்று.


Click it and Unblock the Notifications











