அஜீத், சுதீப், நரேன், அஜ்மல்: இவர்களில் உங்களை கவர்ந்த வில்லன் யார்?

சினிமாக்களில் வில்லன் கதாபாத்திரங்களில் வரும் நடிகர்களுக்கு பெரும்பாலும் மக்களிடம் வரவேற்பு கிடைப்பதில்லை. ஆனால் தாங்கள் ஏற்றுள்ள வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து, மக்களின் மனதில் இடம் பிடிப்பவர்களும் உண்டு.

வசனங்களை ஸ்டைலாக பேசுவது, நடை, உடை, பாவனை என்று பல முக்கிய காரணங்களின் மூலம் வில்லன் கதாபாத்திரங்களில் வரும் நடிகர்கள், மக்களை கவர்ந்து விடுகின்றனர். இதிலும் ஒரு கதாநாயகன் வில்லனாக நடித்துவிட்டால் அவருக்கு மக்களிடம் வரவேற்பிற்கு குறைவே இருக்காது.

கடந்த 20 மாதங்களில் வெளியான சினிமாக்களில் நடித்த பல வில்லன்கள், மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர். இதில் அரசியல் மற்றும் பத்திரிக்கை துறையை சார்ந்த மெகா ஹிட் திரைப்படம் 'கோ'வில் வில்லனாக நடித்த அஜ்மல் அமீர், தனது சிறந்த நடிப்பால் மக்களை கவர்ந்துள்ளார்.

அதேபோல மங்காத்தா படத்தில் வில்லனாக நடித்த அஜீத், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். மேலும் நான் ஈ படத்தில் அசத்திய சுதீப், முகமூடி படத்தின் வில்லன் நரேன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். இவர்களில் தங்களின் சிறந்த நடிப்பின் மூலம் உங்களை கவர்ந்த நடிகரை தேர்வு செய்ய தட்ஸ்தமிழ் வாசகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

கீழே வெளியிடப்பட்டுள்ள வில்லன் நடிகர்களின் படங்களை பார்த்து, உங்கள் மனதை கவர்ந்த நடிகரை குறித்த உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்க...

அஜ்மல் அமீர்:

'கோ' படத்தில் வசந்தன் பெருமாள் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் அஜ்மல் அமீர். படத்தின் துவக்கத்தில் மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் நபராக தோன்றும் வசந்தனின் உண்மை உருவம் படத்தின் கிளைமேக்ஸில் தான் தெரிய வருகிறது. கடந்த 2011ம் ஆண்டின் மெகா ஹிட்டான 'கோ' படத்தை இயக்கியவர் கே.வி.ஆனந்த். படத்தில் ஜீவா, கார்த்திகா நாயர், பியா உட்பட பலர் நடித்துள்ளனர்.

அஜீத்:

மங்காத்தா படத்தில் விநாயக் மகாதேவன் என்ற கதாபாத்திரத்தில் வந்த அஜீத், பல பஞ்ச் வசனங்களை பேசியும், ஸ்டைலான உடை அலங்காரத்தில் வந்தும் மக்களை கவர்ந்தார். நடிகர் அஜீத் நடித்த படங்களின் வரிசைகளில் பெரிய அளவில் ஹிட்டான இப்படத்தில் அவரது கதாபாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மங்காத்தா படத்தை இயக்கியவர் வெங்கட் பிரபு. படத்தில் அர்ஜூன் சார்ஜா, த்ரிஷா, மஹத், பிரேம்ஜி, லக்ஷ்மி ராய் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சுதீப்:

கன்னட சூப்பர் ஸ்டாராக இருந்த சுதீப் தனது சிறந்த நடிப்பின் மூலம், தென்னந்திய ஸ்டாராக மாற்றிய படம் நான் ஈ. பழிவாங்கத் துடிக்கும் ஒரு ஈயை மையமாக கொண்ட இந்த கதை, தெலுங்கு, கன்னடம், தமிழ் மொழிகளில் வெளியாகி, மெகா ஹிட்டானது.

படத்தில் சுதீப்பின் சிறந்த நடிப்பை பாராட்டிய தெலுங்கு இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, அவரை அடுத்த கமல்ஹாசன் என்று வர்ணித்தார். நான் ஈ படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜாமவுலி, சமந்தா, நானி உட்பட பலர் நடித்துள்ளனர்.

நரேன்:

முகமூடி படத்தில் வில்லனாக வரும் நரேன் தனது சிறந்த நடிப்பின் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். 'தி டார்க் நைட்' என்ற ஆங்கிலப் படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்தை உள்வாங்கிசிறப்பாக நடித்துள்ளார் நரேன். முகமூடி படத்தை இயக்கியவர் மிஷ்கின். படத்தில் ஜீவா, பூஜா ஹெக்டே, நாசர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X