நெக்ஸ்ட் ஒருவருஷம் ரெஸ்ட்… அஜீத் அதிரடி

By Mayura Akilan

படத்தோட பேரு என்று ஒருவருடம் பேச வைத்தவர் அஜீத், இதோ ஆரம்பம் என்று அறிவித்தாகிவிட்டது. படப்பிடிப்பிற்காக ஓடிக்கொண்டே இருந்ததில் கால்வலி கவனிக்க கூட நேரமில்லை. இப்போது பிரச்சினை தீவிரமடைந்துள்ளதால் ஒரு ஆண்டுக்கு ஓய்வெடுக்கப் போவதாக அறிவித்துள்ளார் அஜீத்.

ஆரம்பம் படப்பிடிப்பில் சின்னச் சின்னதாக ஆக்ஸிடென்ட் வேறு அஜீத்தை அசத்திவிட்டது. விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஆரம்பம், சிறுத்தை சிவா இயக்கத்தில் பரபரப்பாக சுவிட்சர்லாந்து பயணம் என கடந்த பல மாதங்களாகவே பயங்கர பிஸி.

எனவே ஷாலினி, மகளின் கோரிக்கையை ஏற்று ஒரு ஆண்டுக்கு ஓய்வெடுத்து கால்வலி பிரச்சினையை சரிசெய்யப் போவதாக கூறியுள்ளார். வார இதழ் ஒன்றிர்கு அவர் அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொஞ்சம் கறுத்திருக்கேனோ?

கொஞ்சம் கறுத்திருக்கேனோ?

சிறுத்தை சிவாவின் படத்திற்காக சுவிட்சர்லாந்து பயணம் முடித்துவிட்டு இப்போதுதான் சென்னை திரும்பியிருக்கிறார். வெயில் மட்டுமல்ல பனியும் கூட நிறத்தை மாற்றிவிடும் லேசாக கறுத்துப் போயிட்டேன்ல. சென்னை வந்துட்டேன்ல இனி கலர் வந்திடும் என்று கூலாக சொன்னார் அஜீத்.

ஆரம்பம் எப்போ?

ஆரம்பம் எப்போ?

‘ஆரம்பம்' படத்தின் வேலைகள் முழுவதும் முடிந்து விட்டது. விரைவில் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வரும்.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

நாகிரெட்டி தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கும் படமும் கிட்டத்தட்ட முக்கால்வாசி முடிந்து விட்டது. பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நெக்ஸ்ட் ரெஸ்ட்

நெக்ஸ்ட் ரெஸ்ட்

இந்த படங்களுக்குப் பின்னர் ஒரு வருடத்திற்கு ரெஸ்ட்தான். கால்வலி பிரச்சினையை சரி செய்யணுமே!. ஒன்றரை வருடமா அந்த வலியோடவே நடமாடிட்டு இருக்கேன்.

நாங்க லஞ்சம் வாங்கலையே

நாங்க லஞ்சம் வாங்கலையே

இரவு, பகல் பாக்காம கடுமையாக உழைக்கிறோம். அதனால கோடிக்கணக்கில சம்பளம் வாங்கிறோம். சம்பளம் வாங்குறதுக்கும் லஞ்சம் வாங்குறதுக்கும் வித்தியாசம் இருக்கே.

அரசியல் வேண்டாமே

அரசியல் வேண்டாமே

நம்ம நாட்ல ஊருக்கொரு கட்சி..., சாதிக்கொரு கட்சி..., சந்துக்கொரு ரவுடின்னு நிறைய இருக்கு இதுல நான் வேற வந்து சிக்கணுமா? எனக்கு வேண்டாமே.

கடவுள் எச்சரிப்பான்

கடவுள் எச்சரிப்பான்

தப்புகள் எல்லை மீறும் போது கடவுள் சும்மா இருக்க மாட்டான். இயற்கையின் பல வடிவங்களில் வந்து எச்சரிப்பான் அது சுனாமி, நில நடுக்கம், நிலச்சரிவுன்னு பல வடிவங்களில் இருக்கலாம். நான் கடவுளை நம்புறேன்.

லாங் டிரைவ் போகணும்

லாங் டிரைவ் போகணும்

புதிதாக வாங்கியிருக்கும் பி.எம்.டபிள்யூ பைக்கில் நீண்ட பயணம் போகவேண்டும் என்பது அஜீத்தின் ஆசை. இதற்கான பாதுகாப்பு உடைகளை சுவிட்சர்லாந்தில் வாங்கியிருக்கிறாராம். இந்த பைக் மணிக்கு 305 கிலோ மீட்டர் வேகத்தில் போகக் கூடியது. ஒருமணி நேரத்தில் சென்னையில் இருந்து திருச்சியை தொட்டுவிடலாமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X