நன்றி கூறிய அஜீத்: உருகி நின்ற சுரேஷ்

By Siva

சென்னை: ஆசை படத்தில் தனக்கு டப்பிங் பேசிய நடிகர் சுரேஷுக்கு அஜீத் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆசை படம் அஜீத் குமாருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் அவருக்கு நடிகர் சுரேஷ் டப்பிங் பேசியிருந்தார்.

தனக்காக குரல் கொடுத்த சுரேஷுக்கு அஜீத் குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து சுரேஷ் ட்வீட் செய்துள்ளார்.

பெரிய விருது

பெரிய விருது

ஆசை படத்தில் டப்பிங் பேசியதற்காக அஜீத் என்னிடம் வந்து நன்றி தெரிவித்தார். அது தான் எனக்கு கிடைத்த பெரிய விருது ஆகும். இது அவருடைய கருணை உள்ளத்தை காட்டுகிறது. நான் பிறருக்காகவும் டப்பிங் பேசியுள்ளேன். சரி விடுங்கள் என்று சுரேஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

யாரையும் புகழவில்லை

யாரையும் புகழவில்லை

எனது ட்வீட் எனது மனப்பூர்வமானது. எனது அனுபவங்களில் இருந்து கூறப்பட்டதே தவிர எந்த ஸ்டாரையும் புகழ்வதற்காகவோ அல்லது எந்த ரசிகரையும் நோகடிக்கவோ இல்லை என்று சுரேஷ் தெரிவித்துள்ளார். டப்பிங் என்பது நன்றி கூறப்படாத வேலை. திரைக்கு பின்னால் குரல் கொடுக்கும் ஹீரோக்களுக்காக நான் வருத்தப்படுகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பியா பாஜ்பாய்

பியா பாஜ்பாய்

சுரேஷின் ட்வீட்டைப் பார்த்து பியா பதில் ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர், மிகவும் உண்மை. 2 வரி டப்பிங் பேசியதற்கு எனக்கு ரூ.200 சம்பளம் கிடைத்தது. இதன் மூலம் ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கை இருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது வருத்தத்தில் முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

சின்மயி

சின்மயி

சினிமாவில் உள்ள பெரிய நட்சத்திரங்களுக்கு டப்பிங் பேசும் கலைஞர்கள் பல காலமாக மிகக் குறைவான சம்பளமே பெறுகின்றனர் என்று பாடகியும். டப்பிங் கலைஞருமான சின்மயி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X